கோவாவை மையமாகக் கொண்டு, 1970-ல் நடக்கும்படி உருவாக்கப்பட்ட சைக்கோ திரில்லர் வகை படம் ‘ஹாட்ஸ்பாட்.’
புதுமுக இயக்குனர் தினேஷ் தயாரித்து இயக்கும் இந்த படத்திற்கு, ஆண்டனி திரைக்கதை வசனம் எழுதுகிறார்.
புதுமுகங்களான சந்திப் கதாநாயகநாக நடிக்க கதாநாயகியாக லட்சுமி நடிக்க உள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் தினேஷ் மரியா, ஆண்டர்சன் ஆகியோர் நடிக்கிறார்கள். தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் தயாராகவுள்ள, இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 30 அன்று கோவாவில் தொடங்கி மும்பை, பாங்காக் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து நடைபெற உள்ளது.
இப்படத்திற்கு இசை ஜான் பீட்டர், ஒலிப்பதிவு விவேக், சண்டை பயிற்சி அலெக்ஸ், நடனம் பிரசன்னா.