ஹிப் ஹாப் தமிழா கதைநாயகனாக நடிக்கும் புதிய படத்தை, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ எனும் படத்தை இயக்கிய கார்த்திக் வேணுகோபாலன் இயக்கவுள்ளார். ஹிப் ஹாப் தமிழா நடிப்பில் தயாராகும் ஏழாவது படம் இது.

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறார்.

இப்படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் தெரியவரும்.
இதனிடையே வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் கோகுல் இயக்கத்தில், நடிகர் ஆர். ஜே. பாலாஜி கதையின் நாயகனாக நடித்திருக்கும்‘சிங்கப்பூர் சலூன்’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்த ‘எல் கே. ஜி’, ‘கோமாளி’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘வெந்து தணிந்தது காடு’ உள்ளிட்ட படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரியளவில் வெற்றி பெற்றன!

