Home பொது இது நம்ம குடும்பம் என்பதை மக்கள் உணர படத்தில் பல காட்சிகள் இருக்கிறது! -இது நம்ம...

இது நம்ம குடும்பம் என்பதை மக்கள் உணர படத்தில் பல காட்சிகள் இருக்கிறது! -இது நம்ம குடும்பம்  பட விழாவில் நடிகர் ஆனந்த்பாபு பேச்சு

ஆனந்த் பாபு கதையின் நாயகனாக நடிக்க கதை, திரைக்கதை, வசனம் எழுதி சைதன்யா சங்கரன் இயக்கியிருக்கும் படம் இது நம்ம குடும்பம்.’

இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா கடந்த அக்டோபர் 15-ம் தேதி, மாலை, சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

டாக்டர்.தமிழிசை செளந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொணடார். இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பலர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்கள்.
நிகழ்வில் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சைதன்யா சங்கரன் பேசுகையில், “இது நம்ம குடும்பம் என்று பெயரை கேட்டாலே சந்தோஷமாக இருக்கிறது. சினிமாவும் நம்ம குடும்பம் தான் என்று மேடம் சொன்னாங்க. அதேபோல், இந்த படத்திற்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர்கள் பேரரசு, ஆர்.வி.உதயகுமார், சுப்பிரமணிய சிவா ஆகியோர் எனக்கு வந்து, என்னை ஆசிர்வதித்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் வெற்றியடைய உங்கள் அனைவரது ஒத்துழைப்பும், உறுதுணையும் வேண்டும். ஊடகங்கள் இந்த படத்தை நல்ல முறையில் சிறப்பாக கொண்டு செல்வார்கள், என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த படத்தை வெள்ளித்திரையில் பார்த்து வாழ்த்த வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
படத்தின் நாயகன் ஆனந்த் பாபு பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், முக்கியமான இந்த விழாவை பெருமைப்படுத்த வந்த மதிப்புக்குரிய டாக்டர்.தமிழை செளந்தராஜன், அண்ணன் ராதகிருஷ்ணன், இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சுப்பிரமனணிய சிவா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இது ஒரு வித்தியாசமான படம். இது நம்ம குடும்பம் என்பதற்கான அர்த்தத்தை மக்களை உணர வைக்க படத்தில் பல காட்சிகள் இருக்கிறது. நானும் ஒரு மருத்துவராக ஆகியிருக்க வேண்டும், ஆகாதது விதி. நான் பெங்களூரில் மருத்துவம் படிக்க வேண்டியது. ஆனால், நான் டான்ஸை பெரிசாக்க வேண்டும், என்று விரும்பினேன். அப்போது தான் எனக்கு பட வாய்ப்பு கிடைத்து, அந்த படம் பெரிய வெற்றி பெற்றதால் இன்று நடிகனாகி விட்டேன். அதேபோல், பத்திரிகையாளர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். எனக்கு அப்பா சொல்லிக் கொடுத்த ஒரே பாடம், அவர் எதற்குமே திருப்தியாக மாட்டார், அதே மாதிரி ஒவ்வொரு படமும் எனக்கு ஒரு படி, ஒரு மைல்கல். இந்த படமும் எனக்கு ஒரு மைல்கல். பத்திரிகையாளர்கள் இந்த படத்திற்கு ஆதரவு அளித்து, இந்த மைல்கல்லை நல்லபடியாக கடக்க ஒத்துழைக்க வேண்டும், என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
படத்தின் நாயகி சாஜிதா பேசுகையில், “இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம், நான் கதாநாயகியாக நடிக்கும் முதல் படத்திற்கு நீங்க வந்து ஆதரவளித்ததற்கு நன்றி. இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த சைதன்யா சங்கர் சாருக்கு நன்றி. இந்த படத்தில் நான் நல்லபடியாக நடித்து முடித்த உடனே, கேன்சர் என்ற பெரிய விசயம் என் வாழ்க்கையில் வந்தது. நான் இங்கு வந்து நிற்பேன் என்று நினைக்கவே இல்லை. இப்போது கேன்சரை ஜெயிச்சி  இங்கு வந்திருக்கிறேன், இப்படி இங்கு வந்து பேசுவேன் என்று நினைக்கவில்லை. இங்கு என்ன பேச வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. என் வாழ்க்கையில் நடந்ததை சொல்லி விட்டேன். இது நம்ம குடும்பம் படத்தில் மக்கள் படும் கஷ்ட்டங்களை சொல்லியிருக்கிறோம், நான் எனக்கு நடந்த கஷ்ட்டத்தை சொல்லிவிட்டேன், பலர் சொல்லாமல் இருக்கிறார்கள். எனவே இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு வேண்டும், நன்றி” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்