இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் மிஸ்டர் தமிழகம், மிஸ் தமிழகம், மிஸஸ் தமிழகம் பட்டத்தை வென்றோர் யார் யார்?

இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில், சமூகத்தில் சிறப்பாக பணியாற்றுபவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், சமூக காரணங்களுக்காக நிதி திரட்டும் வகையிலும், ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை பல அழகிப் போட்டிகளை நடத்தியுள்ள இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தற்போது மிஸ்டர், மிஸ், மிஸஸ்-2022 இறுதிப்போட்டியை உலகத்தரத்தில் மிகப் பிரமாண்டமாக சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா  நட்சத்திர விடுதியில் நடத்தியது
மூன்று பிரிவுகளாக  நடைபெற்ற பேஷன் ஷோ நிகழ்ச்சியில் மிஸ்டர் பிரிவில் 30 நபர்களும், மிஸ் பிரிவில் 25 நபர்களும்  மிஸஸ் பிரிவில் 12 நபர்களும் கலந்து கொண்டனர், பாரம்பரிய உடை  மற்றும் வெஸ்டர்ன் உடைகள்  என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில்… போட்டியாளர்கள் பாரம்பரிய உடை மற்றும்  வெஸ்டர்ன் உடைகளை அணிந்து அனைவரையும் கவரும் விதமாக ஒய்யாரமாக மேடையில்  நடை போட்டனர்.
ஆண்கள், பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற  அழகிப்போட்டி நிகழ்ச்சியில் அழகும், திறமையும் வாய்ந்த ஏராளமான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
மிஸ்டர், மிஸ், மிஸஸ்-2022   இறுதிப் போட்டியின்  நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஜான் அமலன் மற்றும் சினேகா நாயர்  ஆகியோர் கலந்து கொண்டனர்
மேலும் ஷபீர் அலி குரேஷி,(பாலிவுட் நடிகர் – மும்பை ),ஷாலினி சோப்ரா,( செலிபிரிட்டி ஃபேஷன் இன்ஃப்ளூயன்சர் – பெங்களூர் ),நிஷாத் அப்ரோஸ்,( ஃபேஷன் ஸ்டைலிஸ்ட் & லைஃப்ஸ்டைல் இன்ஃப்ளூயன்ஸர் – கொல்கத்தா ),மணிகண்டன், ( Mr Fashion World – India ),வர்ஷா வேணுகோபால்,(மிஸ் தமிழகம் 2021)உள்ளிட்ட பல பிரபலங்கள்  கலந்து கொண்டனர்
 இறுதிச்சுற்று  அழகிப்போட்டி நிகழ்ச்சியை பிரபல  ஃபேஷன் கோரியோகிராஃபர் ஃபாஹீம் வடிவமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
மிஸ்டர், மிஸ், மிஸஸ்-2022 இறுதி சுற்று போட்டியில் மிஸ்டர் தமிழகம் 2022-க்கான  போட்டியில்  வெற்றிபெற்ற  அருணுக்கு பாலிவுட் நடிகர் சபீர்  பட்டத்தை வழங்கினார், அதேபோல்மிஸ் தமிழகம் 2022-க்கான  போட்டியில் வெற்றி பெற்ற  அம்ரிதாவுக்கு நடிகை ஷிவானி ராஜசேகர் பட்டத்தை வழங்கினார்  மற்றும் மிஸஸ் தமிழகம் 2022-க்கான  போட்டியில் *வெற்றி பெற்ற அபர்ணாவுக்கு நடிகை ஷிரின் கான்ச்வாளா ,சினேகா ஆகியோர்  இணைந்து பட்டத்தை வழங்கினர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விரைவில் துபாய் நாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச அழகிப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த மாபெரும் போட்டியின் வாயிலாக கிடைத்த தொகையானது விவசாயிகள் மற்றும் விவசாய திட்டங்களுக்கு உதவும் வகையில் வழங்கப்படுமென இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜான் அமலன்  தெரிவித்தார்.
ஜான் அமலன் ஏற்பாட்டில் அனைவரும் திரும்பிப் பார்க்கும்  வண்ணம் மாபெரும் விழாவாக அமைந்திருந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here