Home சினிமா ஜீவி பிரகாஷ், ‘டிராகன்’ நாயகி கயாடு லோஹர் நடிக்கும் ‘இம்மார்டல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்...

ஜீவி பிரகாஷ், ‘டிராகன்’ நாயகி கயாடு லோஹர் நடிக்கும் ‘இம்மார்டல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ஜீவி பிரகாஷ், டிராகன்  படத்தில் அசத்திய கயாடு லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில், ஃபேண்டஸி திரில்லராக உருவாகி வரும் படம் ‘இம்மார்டல்.’

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் சமூக வலைத்தளம் வழியே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். மிக வித்தியாசமான அந்த ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.

படம் ஒரு இளைஞன் வாழ்வில் திடீரென நடக்கும் எதிர்பாராத சம்பவங்களின் பின்னணியில், அனைவரும் ரசிக்கும் அம்சங்களுடன், கலக்கலான கமர்ஷியல் படமாக உருவாகி வருகிறது.

படப்பிடிப்பு, சென்னை, கேரளா முதலான பகுதிகளில் நடந்துள்ளது. இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு மீதமுள்ளது. ஃபேண்டஸி ஜானரில் உருவாகும் படம் என்பதால், படத்தில் சிஜி,விஷுவல் எஃபெக்ட்ஸ், காட்சிகள் அதிக அளவில் உள்ளது.

படத்தின் டீசர், டிரெய்லர் விரைவில் வெளியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்