இசைஞானி’ இளையராஜா – நடிகர் சந்தான பாரதி கலந்துகொண்ட ‘கதை கேளு கதை கேளு.’ வாரம் முழுக்க ஜெயா தொலைக்காட்சியில்…

இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக இசைஞானி இளையராஜா அவர்கள் கலந்து கொண்டு தனது இசை அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி தான் ‘கதை கேளு கதை கேளு.’

இந்நிகழ்ச்சி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9:00மணிக்கும் ,இரவு 11:00 மணிக்கும் ஒளிபரப்பாகிறது .இதன் மறு ஒளிபரப்பு திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5:30 மணிக்கும் இரவு 10:00 மணிக்கும் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் இசைஞானி அவர்கள் தனது ஆரம்ப கால நினைவுகளையும் பாடல் உருவான அனுபவங்களையும் கூறி இப்பாடலை இசைக்கலைஞர்களோடு இசையமைத்து பாடுகிறார். இதனை தொடர்ந்து திரையுலக கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இசைஞானியிடம் கேட்கும் கேள்விகளுக்கு நகைச்சுவையோடு உரையாடி பதிலளிக்கிறார் இசைஞானி.இந்த வார நிகழ்ச்சியில் பன்னீர் புஷ்பங்கள் திரைப்படத்தில் ஆரம்பித்து பல எண்ணற்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மற்றும் நடிகர் சந்தான பாரதி கலந்துகொண்டு  இளையராஜாவுடன் பயணித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் .இந்நிகழ்ச்சியை ரங்கராஜ் பாண்டே தொகுத்து வழங்குகிறார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here