‘நீ இருக்கும் உசரத்துக்கு’ பாடல் மூலம் இளையராஜா இசையில் நடிக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியதில் மகிழ்ச்சி! -ஜமா பட நாயகி அம்மு அபிராமி

நம்பிக்கைக்குரிய கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிற அம்மு அபிராமி, வரும் ஆகஸ்ட் 2, 2024 அன்று வெளிவரவிருக்கும் ‘ஜமா’ திரைப்படத்திலும் அதேபோன்ற பாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தில் அவரது கதாபாத்திரம் பற்றி கேட்டபோது, “எந்தச் சூழலிலும் தைரியமாகவும் வெளிப்படையாகவும் பேசத் தயங்காத டாம்பாய் கேரக்டரில் நடித்திருக்கிறேன். இந்த கதாபாத்திரம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். ஒரு நடிகையாக என் முழுத்திறனையும் வெளிப்படுத்தும் வாய்ப்பு இந்தப் படத்தில் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ’ஜமா’ எனக்கு மறக்க முடியாத பல அனுபவங்களை அளித்துள்ளது, இந்த சிறந்த வாய்ப்புக்காக நான் இயக்குநர் பாரி இளவழகன் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி கூறுகிறேன். இசையமைப்பாளர் இளையராஜா சாரின் இசையில் நடிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு நடிகரின் கனவாக இருக்கும். எனக்கு அது ‘நீ இருக்கும் உசரத்துக்கு’ பாடல் மூலம் நிறைவேறியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

படத்தை பரி இளவழகன் இயக்கி, நடித்திருக்கிறார். சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என் மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, ஜேசுராஜ், எஸ்.சாரதி கிருஷ்ணன், சிவா மாறன், ஏ.கே.இளவழகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார்.

படத்தை பிக்சர் பாக்ஸ் நிறுவனத்தின் அலெக்சாண்டர் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறார்.

எஸ்எஸ்பிவி லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட்டின் எஸ். சாய் தேவானந்த், எஸ். சசிகலா, எஸ். சாய் வெங்கடேஸ்வரன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here