ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் கதாநாயகனாய் சந்தீப் கிஷன்… ஜனவரியில் படப்பிடிப்பு துவங்கவிருப்பதாக லைகா புரொடக்‌ஷன்ஸ் அறிவிப்பு!

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படத்தை, நல்ல கதையம்சம் கொண்ட படங்களை பிரமாண்டமாகத் தயாரிப்பதில் பெயர் பெற்ற, புதிய திறமைகளை ஊக்குவிப்பதன் மூலம் திரைப்படத் துறையில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவிருப்பது முன்பே தெரிந்த செய்தி. இப்போது, அந்த படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் மோஷன் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் மகிழ்வுடன் வெளியிட்டிருக்கிறது. அது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த படம் பற்றி பேசிய லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை நிர்வாகி ஜிகேஎம் தமிழ் குமரன், “நல்ல கதைகளை எங்களின் தயாரிப்பு நிறுவனம் எப்பொழுதும் ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில், ஜேசன் சஞ்சய் கதை சொன்னபோது சுவாரஸ்யமாகவும் புதிதாகவும் இருந்தது. குறிப்பாக, அந்தக் கதையில் பான் இந்தியா படத்திற்கான களம் இருப்பதை உணர்ந்தோம். ‘நீங்கள் இழந்ததை அதே இடத்தில் தேடுங்கள்’ என்ற மையக்கருவை சுற்றிதான் படம் நகரும். தனது திறமையான நடிப்பால் சந்தீப் கிஷன் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனக்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். பார்வையாளர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என நம்புகிறோம்.

ஜனவரி 2025-ல் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

படத்திற்கு தமன் இசையமைக்கிறார். படத்தில் மற்ற முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்குழுவினரும் பணிபுரிய அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் அதற்கான அறிவிப்புகளை வெளியிடுவோம்” என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here