வித்தியாசமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும் ஜெயா தொலைக்காட்சியில் இப்போது ‘சாய் வித் செலிப்ரிட்டி‘ எனும் நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இந்த நிகழ்ச்சியில் மூன்று சுற்றுகள் உள்ளன, வித்தியாசமான டீ’களுடன் ஒரு டீ பார்ட்டி உடன் முதல் சுற்று ஆரம்பமாகிறது. முதல் சுற்றே முற்றிலும் மாறுபட்ட சுற்றாகவும் விருந்தினர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாகவும் அமைந்திருக்கும்.
நிகழ்ச்சியை சுவாரசியமாக மாற்றவும் விருந்தினர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கவும் எதிர்பாராத கேள்விகளுடன் மூன்றாவது சுற்று அமைந்திருக்கும். இந்த வாரம் யூ டியூப் பிரபலம் நடிகர் ஜிபி முத்து மற்றும் பம்பர்’ பட கதாநாயகன் வெற்றி கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களை நகைச்சுவையுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். நிகழ்ச்சியை பவித்ரா தொகுத்து வழங்குகிறார்.