தமிழகத்தில் இருமொழிக் கொள்கை மட்டுமே! -தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஜேப்பியார் பல்கலைக்கழக தொடக்க விழாவில் உறுதி

ஜேப்பியார் பல்கலைக்கழகத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி செம்மஞ்சேரியில் உள்ள ஜேப்பியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கர்னல் டாக்டர் ஜேப்பியார் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
 
தமிழக  உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஜேப்பியார்  பல்கலைக்கழகத்தை தொடங்கி வைத்தார்.
 
 மேலும் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக  தமிழக உயர்கல்வித்துறை செயலர் கார்த்திகேயன் ஐஏஎஸ் கலந்து கொண்டார்.
 
மேலும்  பல்கலைக்கழக தொடக்க நிகழ்ச்சியில்.ஜெப்பியார் பல்கலைக்கழக வேந்தர்,டாக்டர்.ரெஜினா ஜெப்பியார்  விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து நன்றி உரையாற்றினார்.
 
 மேலும் நிகழ்வில் டாக்டர்.  மரியசீனா ஜான்சன்(வேந்தர், சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்),டாக்டர்.ப.சின்னதுரை (பனிமலர் குழும நிறுவனங்களின் செயலர்), டாக்டர்.பி.பாபு மனோகரன் (செயின்ட் ஜோசப் குழும நிறுவனங்களின் தலைவர்),டாக்டர் மேரி ஜான்சன் (தலைவர், சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்), திரு.எஸ்.முரளி, (தலைவர் ஜெப்பியார் பல்கலைக்கழகம்) மேலும்  வேல்ஸ் பல்கலைக்கழகம், எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தின் வேந்தர்கள் உள்ளிட்ட  கல்வியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்…
 
பல்கலைக்கழகத்தை தொடங்கிவைத்த பின்னர் உயர்க்  கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், ஜேப்பியார்  பல்கலைக்கழகத்தை   தொடங்கி வைத்ததில்  மகிழ்ச்சி அடைவதாகவும் பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட மக்களை படிக்கவைத்தவர்கள் கிரிஸ்னரி மிஷினரிகள் தான்…அதன் காரணமாகத்தான் கன்னியாகுமரியில் அதிகம் படித்தவர்கள் இருந்தார்கள்
 
60 மற்றும் 70 களில் சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும்   அண்ணாமலை பல்கலைக்கழகம் மட்டுமே  இருந்தன. ஆனால் தற்பொழுது நிலைமை மாறி இருக்கிறது ஒவ்வொரு மாவட்டத்திலேயே 50க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இருக்கின்றன   இவ்வாறு கல்வியில்  ஏற்பட்டிருக்கக் கூடிய வளர்ச்சிதான் திராவிட மாடல் ஆட்சி  தான் படித்த காலங்களில் பெண்கள் பள்ளிகளுக்குச் செல்வது என்பது முற்றிலும் இல்லை ஆனால் தற்போது அதிக அளவிலான பெண்கள் கல்லூரிகளில் படிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது இதுதான் திராவிட மாடல் ஆட்சி என தமிழக முதல்வர் சொல்லிக்கொண்டிருக்கிறார்.உயர் சாதியினர் மட்டுமே படிக்கும் நிலைமை இருந்த காலம் மாறி தற்போது அனைவரும் படிக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது அனைவரும் சமம் சமத்துவம் இதுதான் திராவிட மாடல்
 
 தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மிக முக்கியமானது.தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையை தமிழகத்திற்கு போதுமானது தமிழகத்தில் பேசுவதற்கு தமிழ்மொழியும் உலக அளவில் பேசுவதற்கு ஆங்கில மொழியும் போதுமானது. மற்ற மொழிகள் தேவையில்லை எனவே ஜேப்பியார் பல்கலைக்கழகம் இருமொழிக் கொள்கையை  பின்பற்ற வேண்டும்.
 
 புதிய கல்விக் கொள்கை ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு,பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று சொல்கிறது அப்படியானால் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை  பாதிக்கப்படும் எனவே இத்தகைய கொள்கை தேவையில்லை
 
 ஜேப்பியார் அவர்கள் திராவிட மாடலை பின்பற்றி வளர்ந்தவர்  தமிழக முதல்வர் செம்மொழி விருது வழங்கும் இந்நாளில் இந்த பல்கலைக்கழகம் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here