ஒளிபரப்பப்படும் ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களுக்கிடையே தனி மரியாதை உண்டு. கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள், பிரசித்திப்பெற்ற கோயில் திருவிழாக்கள் ஆகியவற்றை நேரடியாக ஒளிபரப்புவதில் முன்னோடியாக ஜெயா டிவி திகழ்ந்து வருகிறது.
அவ்வகையில், உலகப்புகழ்பெற்ற திருநள்ளாறு அருள்மிகு தர்பாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் சனிப்பெயர்ச்சி பெருவிழாவை வரும் 20ம் தேதி புதன் கிழமை மாலை 4.30 மணிமுதல் சிறப்பு நேரலையாக ஒளிபரப்புகிறது. அதே வாரத்தில், டிசம்பர் 23 சனிக்கிழமை அதிகாலை 4.00 மணி முதல் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியையும் நேரடியாக ஒளிபரப்பவுள்ளனர். இந்நிகழ்ச்சிகளை கலைமாமணி ஸ்ரீகவி மற்றும் நங்கநல்லூர் Dr.பஞ்சநாதன் நேர்முக வர்ணனை செய்யவுள்ளனர்.