ஆர்யா, சித்தி இத்னானி நடிக்க, முத்தையா இயக்கி சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்.’
இந்த படத்தில் பிரபு, கே.பாக்யராஜ், மாஸ்டர் மகேந்திரன், பி.எஸ்.அவினாஷ், ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், ரேணுகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் ZEE5 ஓடிடி தளத்தில் வரும் ஜூலை 7-ம் தேதி வெளியாகிறது.
மன உறுதி கொண்ட புரட்சிகரமான சிறைக்கைதியான காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கத்தை, [ஆர்யா] சந்திக்கப் பயணம் மேற்கொள்ளும் தமிழ்செல்வி [சித்தி இத்னானி] என்ற இளம் பெண்ணின் வாழ்க்கைப்பயணத்தை விவரிக்கிறது மற்றும் தமிழ்செல்வி ஆகியோரிடையிலேயான உறவின் மர்மமான தன்மை, காதர் மற்றும் வெடிகுண்டு வெயிலன் (தமிழ்) ஆகியோருக்கு இடையே நிலவும் ஆழமான கடும் வெறுப்போடு கூடிய பகைமை மற்றும் அவன் வாழ்க்கையில் குறுக்கிடும் அபாயகரமான வலிமை மிக்க எதிரிகளை எதிர்க்கும் அவனது போராட்டத்தை காட்சிப்படுத்துகிறது.
படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து இயக்குநர் எம்.முத்தையா “இந்த படம் காதல், தியாகம், மீண்டெழும் திறனாற்றல் ஆகிய உணர்வுகளை ஆராயும் ஒரு உணர்ச்சிபூர்வமான கதை. தாங்கள் வழக்கமாக பின்பற்றிவரும் மதக் கோட்பாடுகளை பார்வையாளர்கள் மாற்றியமைக்கவேண்டிய இடையறாத தேவை இப்போது இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, சமூக – மதக் கோட்பாடுகளைத் தகர்த்தெறியும் ஒரு திரைப்படமாக இதை உருவாகியிருக்கும் அதே வேளையில் எனது பார்வையாளர்களுக்கான உணர்ச்சிகரமான அடிதடி நிறைந்த பொழுதுபோக்குச் சித்திரமாகவும் உருவாக்கவும் நாங்கள் கடும் முயற்சி எடுத்துள்ளோம்.
பெரிய திரையில் வெற்றி பெற்றதை போல டிஜிட்டல் தளத்திலும் இந்த படம் ஒரு மாபெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார்.
ஆர்யா பேசியபோது “காதர் கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியது என் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அனுபவமாக அமைந்தது. அனுபவம் வாய்ந்த கலைஞர்கள் குழுவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அனைவரும் எங்கள் படத்தைப் காணவேண்டும். காதரின் தடுமாற்றமில்லாத அசைக்க முடியாத உறுதிப்பாடு மற்றும் நீதிக்கான அவரது தேடலில் இருந்து அவர்கள் உத்வேகம் பெற வேண்டும்” என்றார்.

