‘இந்தியன் பனோரமா’, ‘கோவா திரைப்படவிழா’வைத் தொடர்ந்து ‘புனே உலகத் திரைப்படவிழா’வில் பெருமையை சம்பாதிக்கப்போகும் ‘காதல் என்பது பொதுவுடமை.’

நவீன காதல் கதையாக, ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள படம் ‘காதல் என்பது பொதுவுடமை.’ லிஜோ மோல், ரோகிணி மொலேட்டி வினீத் ராதாகிருஷ்ணன், கலேஷ் ராம் ஆனந்த், அனுஷா, தீபா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மம்மூட்டி நடித்த ‘காதல் தி கோர்’ திரைப்படத்தை இயக்கிய ஜியோ பேபி வழங்க, ‘மேன்கைன்ட் சினிமாஸ்’, நித்திஸ் புரொடக்சன்’, ‘சிம்மட்ரி சினிமாஸ்’ இணைந்து தயாரித்துள்ளனர்.

‘இந்தியன் பனோரமா’, ‘கோவா திரைப்படவிழா’ ஆகியவற்றில் தேர்வாகி திரையிடப்பட்டு பெருமையைச் சம்பாதித்த இந்த படம் ஜனவரி 19 மற்றும் 21-ம் தேதி ‘புனே உலகத் திரைப்படவிழா’வில் திரையிட தேர்வாகி கூடுதல் அங்கீகாரத்தைப் பெறுகிறது.

படத்தை ஸ்ரீசரவணன் ஒளிப்பதிவு செய்ய, கண்ணன் நாராயணன் இசையமைக்க, டேனி சார்லஸ் எடிட்டிங் செய்துள்ளார்.

ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் ‘லென்ஸ்’, ‘மஸ்கிடோ பிலாஷபி’, ‘தலைக்கூத்தல்’ ஆகிய படங்களை இயக்கியவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here