ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை… ரஜினி ரசிகர்களைக் கெளரவித்த ‘கட்டீஸ் கேங்’ படக்குழு!

மஞ்சுமல் பாய்ஸ், பிரேமலு உள்ளிட்ட மலையாளப் படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வசூலில் சாதனை படைத்தது. அதையடுத்து ‘கட்டீஸ் கேங்’ என்ற மலையாளப் படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

அனில் தேவ் இயக்கியுள்ள இந்த படத்தில் உன்னிலாலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் சிறந்த படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் சவுந்தரராஜா இந்த படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார்.

இந்த படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர்களும், எழுத்தாளருமான ராஜ் கார்த்திக், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். ரஜினிகாந்த் படங்களை பார்த்து வளர்ந்தவர். இவர் ரஜினிகாந்த் அவர்களை வைத்து படம் இயக்க ஆசை. ஆனால், அது நிறைவேறாமல் இருக்கிறது. இருப்பினும், ரஜினிகாந்தை முன்னோடியாக வைத்து கட்டீஸ் கேங் என்ற படத்திற்கு கதை எழுதி இருக்கிறார்.

கதாநாயகன் ரஜினியின் தீவிர ரசிகராக நடித்து இருக்கிறார். இந்த படம் கேரளா மட்டுமில்லாமல் தமிழ் நாட்டிலும் வெளியாக இருக்கிறது. இதை கொண்டாடும் விதமாக சென்னை ரோகிணி தியேட்டரில் கட்டீஸ் கேங் படத்தின் டிரைலரை வெளியிட்டு இருக்கிறார்கள்.

ரஜினிகாந்த் ரசிகர்களை கெளரவிக்கும் விதமாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது. நிகழ்வில் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைவர் சினோரா அசோகன் மற்றும் ரோகிணி திரையரங்க உரிமையாளர் ரேவந்த்தும் தலைமை தாங்கினார்கள். கட்டீஸ் கேங் திரைப்படம் மே மாதம் 16 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here