ஹீரோ, வில்லன் என ஏற்கும் கதாபாத்திரம் எதுவானாலும் தனது அசாத்திய நடிப்பால் அசத்திவருகிற ஆர்.கே. சுரேஷ் நடிக்கும் புதிய படத்திற்கு வித்தியாசமாக ‘குளவி‘ என்று பெயரிட்டுள்ளனர்.
வில்லேஜ் ஸ்டுடியோஸ் என்ற படம் நிறுவனம் சார்பில் சி .முருகன் அன்னை கே.செந்தில்குமார் இருவரும் இணைந்து மிக பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில், சசிகுமார் ஜோடியாக அயோத்தி படத்தில் நடித்த அமீரா வர்மா கதைநாயகியாக நடிக்கிறார். இவர்களோடு ஆனந்த் நாக், கஞ்சா கருப்பு, சிங்கம்புலி, அப்பு குட்டி, நிமல், முத்துகாளை இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் வி.எஸ்.செல்வதுரை.
இவர் இயக்குநர் எழுத்தாளர் பாலகுமாரன், இயக்குனர்கள் ஏ.ஆர். முருகதாஸ் , சித்து ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியதோடு ஏராளமான படங்களுக்கு இணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
படம் பற்றி இயக்குநரிடம் பேசினோம்… ”உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை உருவாக்க இருக்கிறேன். அந்த மக்களின் கலாச்சாரம் வாழ்வியலை இதில் பதிவு செய்ய இருக்கிறோம். குடும்பக் கட்டமைப்பு மற்றும் அதில் உள்ள முரண்பாடுகளையும், மனித உறவுகளின் சீரழிவுகளையும் இதில் நேர்த்தியாக சொல்ல இருக்கிறோம்.
ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்களின் முக்கியத்துவம் எப்படி இருக்கிறது. அதை அவர்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பதை சொல்லும் படம் இது. நகைச்சுவையுடன் முழுக்க முழுக்க குடும்ப உறவுகளைப் பற்றிய படமாக இதை கொடுக்க இருக்கிறோம்.
படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் துவங்கியுள்ளது. தொடர்ந்து திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறவிருக்கிறது” என்றார்.
படம் பற்றிய கூடுதல் விவரங்கள்:-
மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பிஸ்தா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த விஜயன் முனுசாமி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.
பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த யதார்த்த இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
பாடல்கள் – கபிலன், மோகன்ராஜ்
எடிட்டிங் – மு. காசிவிஸ்வநாதன்.
நடனம் – ராதிகா, சக்தி ராஜு.
ஸ்டண்ட் – ஹரி முருகன், ஷங்கர்
நிர்வாக தயாரிப்பு – நிமல்
தயாரிப்பு மேற்பார்வை – சிவகுமார்.
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு – C. முருகன், அன்னை K. செந்தில் குமார்
