ராகவ் மிர்தாத் இயக்கத்தில் கலகலப்பான காதல் கதையாக உருவாகியுள்ள திரைப்படம் ‘காலங்களில் அவள் வசந்தம்.’
காதல் கதைகள் அரிதாகி வரும் தமிழ் சினிமாவில், காதலை மாறுபட்ட கோணத்தில் சொல்லும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.
புதுமுகம் கௌஷிக் ராம் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். டாணாக்காரன் புகழ் அஞ்சலி நாயர் கதாநாயகியாக நடிக்கிறார். ஹெரோஷினி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வர்கீஸ் மேத்தியூ, ஆர் ஜே விக்னேஷ், அனிதா சம்பத், ஸ்வாமிநாதன், சவுந்தர்யா, ஜெயா ஸ்வாமிநாதன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஶ்ரீ ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் இசை விழா திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் கலந்து கொள்ள இன்று இனிதே நடந்தது.
விழாவில் தயாரிப்பாளர் CV குமார், இயக்குநரை எனக்கு 10 வருடமாக தெரியும். அட்டகத்தி நேரத்தில் என்னிடம் இந்த கதை சொன்னார். அவரிடம் இந்த கதையை படமெடுக்கலாம் என பேசிக்கொண்டிருந்தோம். மிக அழகான காதல் கதை இது. இந்தக் கால இளைஞர்கள் பற்றிய கதை. அனைவரும் படத்தில் அருமையாக பங்களிப்பு தந்துள்ளார்கள்” என்றார்.
நடிகர் RK சுரேஷ், சி.வி. குமார் இருப்பதால் கதைக்களம் நன்றாக இருக்கும். காலங்களில் அவள் வசந்தம் டைட்டிலே நன்றாக இருக்கிறது. இன்று தமிழ் சினிமா நன்றாக இருக்கிறது. தம்பி விஷ்வா இப்படத்தில் பங்குபெற்றுள்ளார். நாயகன் அழகாக இருக்கிறார்” என்றார்.
இயக்குநர் ராகவ் மிர்தாத், ஸ்போர்ட்ஸில் லவ் ஆல் சொல்லி துவங்குவது போல் தான் இந்தப்படத்தை துவங்கியுள்ளேன். அன்பு தான் இந்தப்படத்தின் அடிப்படை. ஹரி மிக அற்புதமான இசையை தந்துள்ளார். கண்டிப்பாக இசை மிகப்பெரிய அளவில் பேசப்படும். இந்தப்படம் கல்யாணத்திற்கு பிறகான காதலை சொல்லும் படம். மெச்சூரிட்டியை புரிந்து கௌஷிக் மிக அற்புதமாக நடித்திருக்கிறார். அஞ்சலி நாயர், ஹெரோஷினி இருவரும் கண்டிப்பாக பாராட்டை பெறுவார்கள். தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் மிகப்பெரிய அளவில் உழைத்துள்ளார்கள். இந்தப்படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்” என்றார்.
தொழில்நுட்பக் குழு:- கோபி ஜகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, அறிமுக இசையமைப்பாளர் ஹரி இசையமைக்க, லியோ ஜான் பால் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
இந்த படத்தை தமிழகமெங்கும் வி ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட் வெளியிடுகிறது.

