Home பொது ரெஜினா கசாண்ட்ரா நடிக்கும் ‘ஆர் எக்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் – செகண்ட் லுக் போஸ்டர்...

ரெஜினா கசாண்ட்ரா நடிக்கும் ‘ஆர் எக்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் – செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

இந்திய சினிமா ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படைப்பாளி லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் நிறுவனமும், இந்திய திரையுலகின் வெற்றிகரமான முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் முதன்முறையாக இணைந்து தமிழில் தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஆர் எக்ஸ் – RX’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.
சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘பாம் – Bomb’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘ஆர். எக்ஸ் – RX’ . இதில் நாசர், ரெஜினா கசாண்ட்ரா, ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இதன் கதையை ஹரிஹரன் ராஜு எழுத, எஸ். கே. செல்வகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்க, ஜி. கே. பிரசன்னா படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கே. மனோஜ் குமார் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார்.
ட்ராமா திரில்லராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்குவாட் – மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் லோகேஷ் கனகராஜ் – நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  இப்படத்திற்கு ‘ஆர் எக்ஸ் – RX’ என்ற டைட்டிலும், அதற்கான ஃபர்ஸ்ட் லுக் – செகண்ட் லுக் போஸ்டர்களையும் தீபாவளி திருநாளை முன்னிட்டு படக்குழுவினர் வாழ்த்துக்களுடன் வெளியிட்டுள்ளனர்.
இதில் கதையின் நாயகியான ரெஜினா கசாண்ட்ரா – முக கவசத்தை அணிந்து தீர்க்கமான பார்வையுடன் தோன்றுவதும்… செகண்ட் லுக்கில் ரயிலில் பயத்துடன் பயணிப்பது போல் வடிவமைக்கப்பட்டிருப்பதும் … படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது. மேலும் ‘ஆர் எக்ஸ்- RX’ என்ற டைட்டில்-  நோயாளிகளை பரிசோதித்த பின் மருத்துவர்கள்.. அவர்களின் நோயை குணப்படுத்துவதற்காக பரிந்துரைக்கும்  பிரிஸ்கிரிப்ஷனில்.. இந்த ‘ RX’ இடம் பிடித்திருக்கும் என்பதால்.. மெடிக்கல் மாஃபியாவை பற்றிய திரில்லர் படைப்பாக இருக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பையும் உண்டாக்கி இருக்கிறது.
ஆர் எக்ஸ் – RX’ படத்தை பற்றிய புதிய தகவல்களை படக்குழுவினர் தொடர்ச்சியாக வெளியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு… திரை ஆர்வலர்களிடத்திலும் , இணையவாசிகளிடமும் ஏற்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்