நடிகர் பிரதீப் ரங்கநாதனுடன் குறும்படத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவமுள்ள டி ஐ கபில், தற்போது ‘லவ் ப்ராஜெக்ட்’ என்ற தனது முதல் முழுநீள திரைப்படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் சங்கீதா கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய் டிவி சக்திவேல், குண்டு சத்யா, வினோத், விஜய் சேனாதிபதி ஆகியோரும் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”இன்றைய இளைஞர்களின் காதல், உறவுகள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைத்து, வித்தியாசமான காட்சியமைப்பு மற்றும் தரமான தொழில்நுட்பத்தில் உருவாக்கி வருகிறோம்.
காதலை ஒரு புதிய பார்வையில் ரசிகர்களுக்கு வழங்குவதே எங்கள் நோக்கம். லவ் ப்ராஜெக்ட் மக்கள் மனதில் நீண்ட காலம் நிற்கும் திரைப்படமாக இருக்கும். படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியீடு உள்ளிட்ட படம் குறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும்.
படக்குழு:-
ஒளிப்பதிவு – சாதிக் கபீர்
இசை – சிமியோன் டெல்பர்
பாடல்கள் – டெல்பர்
எடிட்டிங் – அபினேஷ்
நடனம் – தேவா



