ஜெய், தன்யா ஹோப் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் வெப் சீரிஸ் ‘லேபிள்.’
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக இந்த வெப் சீரிஸை வெளியிடவிருக்கிறது.
‘கனா’, ‘நெஞ்சுக்கு நீதி’ என இரண்டு சூப்பர்ஹிட் படங்களை வழங்கிய இயக்குநர் அருண்ராஜா காமராஜ் மாறுபட்ட கதைக்களத்தில் இயக்கும் இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு துவங்கியது.
அப்போது பேசிய இயக்குநர் அருண்ராஜா காமராஜ், “ஒருவன் எந்த பகுதியை சேர்ந்தவன் என்பதை பொறுத்தே, அவனது குணாதிசயம் இருக்கும் என்கிற பொதுப்படை எண்ணமே இங்கு பலருக்கும் இருக்கிறது. இதுவே அவர்களை தவறான வழியை நோக்கி செல்ல காரணமாகவும் அமைகிறது. இப்படி தனது வாழ்விடம் சார்ந்தே தனது வாழ்க்கை அமையும் என்பதை ஒருசிலரால் மட்டுமே மாற்றியமைக்கவும் முடிகிறது. ஆனால் இந்த சமூகம் தனது பொதுப்படையான பார்வையை மாற்றியமைக்குமேயானால் , ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையை தானே தீர்மானிக்க முடியும். இந்த விஷயத்தை மையமாக வைத்து லேபிள் உருவாகவிருக்கிறது” என்றார்.
வெப் சீரிஸ் குழு:-
தயாரிப்பு – முத்தமிழ் படைப்பகம்
இசை – சாம் CS
ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன்
எடிட்டிங் – ராஜா ஆறுமுகம்
கலை இயக்குநர் – வினோத் ராஜ்குமார்
பாடல்கள் – யுகபாரதி, மோகன் ராஜா, லோகன் இயக்குநர் அருண்ராஜா காமராஜ்
நடன அமைப்பு – அசார்
சண்டைப் பயிற்சி – சக்தி சரவணன்

