Home சினிமா  ஓணம் பண்டிகைக் கொண்டாட்டமாக வெளியாகிறது கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ள ‘லோகா – சேப்டர்...

 ஓணம் பண்டிகைக் கொண்டாட்டமாக வெளியாகிறது கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ள ‘லோகா – சேப்டர் 1 : சந்திரா.’

இந்திய சினிமாவில் முதல் பெண் சூப்பர் ஹீரோவை அறிமுகப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியாக,  டொமினிக் அருண் எழுதி இயக்கியுள்ள படம் ‘லோகா – சேப்டர் 1 : சந்திரா.’

இந்த படத்தில், கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோவாக அதிரடி அவதாரம் எடுத்துள்ளார். நஸ்லென் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

துல்கர் சல்மானின் வெய்ஃபரர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஏழாவது படைப்பு,  திரைப்படம், இந்த ஓணம் பண்டிகைக் கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது. இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த படத்தின் டீசர் வெளியானதிலிருந்து, படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மலையாள சினிமா இதுவரை காணாத புதிய உலகத்தை காட்சிப்படுத்தியிருக்கும், இந்த திரைப்படத்தினை எதிர்பார்த்து ரசிகர்களும், திரை ஆர்வலர்களும் பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இப்படத்தில் சந்தூ சலீம் குமார் ,அருண் குரியன், சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பல பகுதிகளாக உருவாகும் லோகா சூப்பர் ஹீரோ யுனிவர்ஸ் படங்களின் முதல் பாகம் என்பதால், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்