இயக்குநர் எஸ்.ஜே. சூர்யாவின் உதவி இயக்குநர் குருச்சந்திரன் நடித்து இயக்கும் படம் ‘மலையப்பன்.’
முக்கியமான கதாபாத்திரங்களில் இயக்குர்கள் பேரரசு, சுப்ரமணிய சிவா, ஷரவணா சுப்பையா உள்ளிட்டோர் நடிக்க மற்ற கதாபாத்திரங்களில் முன்னணி நட்சத்திரங்கள் இணைகின்றனர்.
படம் பற்றி இணை இயக்குநர் மூதுரை பொய்யாமொழியிடம் கேட்டபோது, ”சென்னை போன்ற பெருநகரத்தில் தொடங்கும் திரைப்படத்தின் கதை, ஒட்டுமொத்தமாக மலையும் மலை சார்ந்த இடமான மதுரை மாவட்டத்தின் உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலை சுற்றியுள்ள கிராமங்களிலும், வாசிமலையான் கோயில் மலை, சதுரகிரி மலை, பருவதமலை, வெள்ளியங்கிரி மலை போன்ற தமிழகத்தின் தலைசிறந்த ஆன்மீக சுற்றுலா தளங்களில் இந்த கதையின் நிகழ்வுகள் நடப்பது போன்று ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுக் கதை அமைக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக திரைப்படங்கள் கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி காட்சி அமைப்புகள் இருக்கும்.
இந்த படத்தின் கதை சென்னை போன்ற பெரு நகரங்களில் தொடங்கி கதாநாயகனின் வாழ்க்கை எப்படி கிராமங்களில் ஒரு உன்னதமான காதலோடு கதை எப்படி நகர்கிறது என்பதை மிகவும் எதார்த்தமாகவும் தத்ருபமாகவும் காட்சிகளாக உருவாக்கப்பட்டு வருகிறது” என்றார்.
லோக்கல் சரக்கு, கடைசி தோட்டா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த சுவாமிநாதன் இராஜேஷ் இசைக்கு, கவிஞர் காதல்மதி பாடல் எழுத, பிரபல பின்னணி பாடகர் பிரசன்னா பாட, இராம்தாஸ் – விஜயா முகன் நடனம் அமைக்க, பி.எல். தேவா அரங்கம் அமைத்துள்ளார்.
இலட்சுமணன் படத்தொகுப்பு செய்ய, திருப்பூர் செ. செல்வம் இணைத் தயாரிப்பில் மலையப்பன் வேகமாக வளர்ந்து வருகிறான்.


