யானையுடன் விமல் நடிக்கும் ‘மகாசேனா’ படத்தின் பர்ஸ்ட் லுக்’கை நடிகர் சூரி, இயக்குநர் விஜய் மில்டன் இணைந்து வெளியிட்டு வாழ்த்து!

விமல் நடிப்பில் தினேஷ் கலைசெல்வன் எழுதி இயக்கும் ‘மகாசேனா’ திரைப்படம் இயற்கை, ஆன்மீகம் மற்றும் புராணக் கூறுகளை இணைக்கும்காடு சார்ந்த ஆக்சன் திரில்லர்.

இந்த படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக்கும் நடிகர் சூரி மற்றும் இயக்குநர் விஜய் மில்டன் ஆகியோரால் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டன. காடு மற்றும் ஆன்மீக நிழல்களில் உருவான இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

படத்தில் விமல், ஸ்ருஷ்டி டாங்கே, யோகி பாபு, மஹிமா குப்தா, ஜான் விஜய், கபீர் துஹான் சிங், ஆல்ஃப்ரெட் ஜோஸ், இளக்கியா, விஜய் சியோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும், படத்தின் முக்கியமும் குறியீடாகவும் யானை சேனா முக்கியமான வேடத்தில் நடிக்கிறது.

படம் பற்றி பேசிய தினேஷ் கலைசெல்வன் “மஹாசேனஹா ஒரு காடு பற்றிய கதை மட்டும் அல்ல — அது மனிதன், இயற்கை, தெய்வீகம் ஆகியவற்றின் இடையிலான நம்பிக்கையையும் ஒற்றுமையையும் பற்றி பேசும் படம். பேராசை இந்த தெய்வீக சமநிலையை குலைக்கிறது. ஆன்மீகம் அதைக் காப்பாற்றுகிறது. ஒவ்வொரு ஃப்ரேமும் இயற்கைக்கான மரியாதையையும், உயிரின் தெய்வீகத்தையும் பிரதிபலிக்கிறது. இந்தக் காடு தானே ஒரு கதாபாத்திரமாக உயிருடன், உணர்வுடன், ஆற்றலுடன் உள்ளது.

மருதம் புரொடக்ஷன்ஸ் தனது முந்தய படைப்பு “இராக்கதன்” போலவே, மகாசேனாவிலும் வலிமையான, காட்சியளவில் பிரம்மாண்டமான ஒரு திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்க இருக்கிறது. ஆன்மீகம், அதிரடி, உணர்ச்சி என இந்த மூன்றையும் இணைத்து உருவாகும் மகாசேனா படம், மலைகளின் மணமும், காடுகளின் தாளமும், நம்பிக்கையின் துடிப்பும் கொண்ட ஒரு மறக்கமுடியாத திரைப்பட அனுபவமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறோம்” என்றார்.

2023ஆம் ஆண்டில் வெளியான க்ரைம் திரில்லர் ‘இராக்கதன்’ படத்தின் வெற்றிக்கு பின், மருதம் புரொடக்ஷன்ஸ் தனது அடுத்த மிகப்பெரிய முயற்சியாக இந்த படத்தை தயாரிக்கிறது.

மனித பேராசைக்கும், தெய்வீக இயற்கை சக்திகளுக்கும் இடையிலான நிலையான மோதலை, குடலூர், வயநாடு, கொல்லிமலை, ஊட்டி ஆகிய இடங்களில் கதையாக அமைக்கப்பட்டுள்ளது.

படத்தின் 90% பகுதி உண்மையான காட்டு பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட காட்சியமைப்புடன் கூடிய இந்த படம், திருவிழா காட்சிகளை மையமாகக் கொண்ட கிளைமாக்ஸ், பழங்குடி இசையையும் பக்தி இசையையும் இணைக்கும் புது இசை அனுபவத்தையும் தருகிறது.

படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு பாடலும் காடின் உயிரோட்டத்தையும், ஆன்மீக பிணைப்பையும் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

படத்திற்காக இசையமைத்துள்ளவர்கள் ஏ. பிரவீன் குமார் மற்றும் எஸ்.என். அருணகிரி. பாடகர்கள் — வைகோம் விஜயலட்சுமி, வி.எம். மஹாலிங்கம், வி.வி. பிரசன்னா, பிரியங்கா என்.கே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here