Home சினிமா தமிழில் ஒரு மான்ஸ்டர் அனுபவத்தை தரவேண்டும் என்ற ஆசையில் முழுக்க முழுக்க கடலில் எடுக்கப்பட்ட படம்...

தமிழில் ஒரு மான்ஸ்டர் அனுபவத்தை தரவேண்டும் என்ற ஆசையில் முழுக்க முழுக்க கடலில் எடுக்கப்பட்ட படம் இது! -மகரம் பட விழாவில் இயக்குநர் அகஸ்டின் பிரபு

தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக, அகஸ்டின் பிரபு இயக்கத்தில் மான்ஸ்டர் ஜானரில், முழுமையான சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகியுள்ளது மகரம்.’
ஹாலிவுட் படைப்புக்கு இணையாக முழுக்க கடலில் பல காட்சிகள் படமாக்கப்பட்டதுடன் இப்படத்தில் 700 VFX காட்சிகள் இடம்பெற்றுள்ளது. படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் விரைவில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
முன்னதாக படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள சென்னையில் நடைபெற்றது.
https://www.youtube.com/watch?v=IsWC8fuHJGI
நிகழ்வில் பேசிய இயக்குநர் அகஸ்டின் பிரபு ”இந்த படம் உருவாக முக்கிய காரணம் தயாரிப்பாளர் ராம் மணிகண்டன் சார். அவரின் நம்பிக்கையால்தான் இந்த படம்  தொடங்கியது. நான்கு கதைகளை ஒன்றோடொன்று இணைத்து ஒரு சினிமாட்டிக் யூனிவர்ஸ் உருவாக்கும் கனவு எனக்கிருந்தது. பெரிய தயாரிப்புகள் செய்யாததை சிறிய டீமாக முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம்.
ஒரு நல்ல ஐடியா வந்தால் அதை உடனே செயல்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நம்பிக்கை. அதிலிருந்தே ‘மகரம்’ உருவானது. ‘சதூர்’ படத்திற்கும் முன் இதை ரிலீஸ் செய்ய திட்டமிட்டோம். ராமேஸ்வரம், தூத்துக்குடி உள்ளிட்ட கடல் பகுதிகளில் படமாக்கினோம். கிட்டத்தட்ட 70% காட்சிகள் கடலுக்குள் எடுக்கப்பட்டது. அது மிகப்பெரிய ரிஸ்க் இருந்தாலும் தரத்தில் சலுகை செய்யவில்லை.
பெரிய டீம்களுக்கு கூட சவாலான இடங்களில் நாங்கள் பணியாற்றினோம். சின்ன பஜெட் என்ற மனநிலை பார்வையாளர்களுக்கு வரக்கூடாது என்பதே எங்கள் நோக்கம். தமிழில் ஒரு மான்ஸ்டர் அனுபவத்தை தரவேண்டும் என்ற ஆசை இருந்தது. டீசரில் நீங்கள் பார்த்தது ஒரு சிறிய பகுதி மட்டுமே. இதற்கு பின்னால் இன்னும் பெரிய விஷயங்கள் இருக்கின்றன. உங்கள் ஆதரவு இருந்தால் இந்த சினிமாட்டிக் யூனிவர்ஸ் நிச்சயம் வெற்றி பெறும். இந்தப்படம் ஒரு ஹாலிவுட் பட அனுபவத்தை தரும். அனைவரும் ஆதரவு தாருங்கள்” என்றார்.
நடிகர் அஜித் விக்னேஷ் ”பெரிய பெயர்கள் இல்லாமல், ஒரு புது டீமாக இணைந்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இயக்குநர் கதை சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடித்தது; கடல் காட்சிகள் சவாலாக இருந்தது. பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்தாலும், இயற்கைக்கு முன் நாமெல்லாம் சிறியது என்பதே பெரிய பாடம். பல சிரமங்களை தாண்டி மிகவும் நேர்மையாக இந்த படத்தை முடித்துள்ளோம். இந்த கதையின் உண்மையான ஹீரோ இயக்குநரே” என்றார்.
படத்தின் லீட் ரோலில் அஜித், ஹீரோயினாக இஷீதாசா நடித்துள்ளனர். அமர் ரமேஷ், நிர்மல், ஷாம், அசோக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் உள்ளனர். ஒளிப்பதிவை அமல் செய்துள்ளார்; எடிட்டிங் கார்த்திக்; இசை ஆதர்ஷ் நந்துரு.
தயாரிப்பாளர் ராம் மணிகண்டன், நடிகை இஷிதா, இசையமைப்பாளர் ஆதர்ஷ் சந்திரசேகரன், நடிகர் அஜித் விக்னேஷ், எடிட்டர் கார்த்திக் செல்வம், நடிகர் அசோக் குமார், ஒளிப்பதிவாளர் அமல் டோமி, நடிகர் சாமி, நடிகர் நிர்மல், நடிகர் அமர் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்