Home சினிமா ‘நான் யாருமில்லாத அனாதையாக இருக்கிறேன்! -சிகிச்சைக்காக பெரும் தொகை வழங்கி ஆறுதல் சொன்ன நடிகர் தக்சன்...

‘நான் யாருமில்லாத அனாதையாக இருக்கிறேன்! -சிகிச்சைக்காக பெரும் தொகை வழங்கி ஆறுதல் சொன்ன நடிகர் தக்சன் விஜயிடம் கதறி அழுத நடிகை காதல் மல்லேஸ்வரி

காதல் மல்லேஸ்வரி கவுண்டமணி, செந்தில் ஆகியோருக்கு ஜோடியாகவும், ‘காதல்’ படத்தில் சந்தியாவிற்கு அம்மாவாகவும் நடித்தவர். 40’க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கடந்த 22 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இதை கேள்விப்பட்டவுடன் நடிகர் தக்‌ஷன் விஜய், ஓடோடி சென்று முதல் ஆளாக பெருந்தொகை கொடுத்து உதவி, ஆறுதல் கூறினார்.

தன்னை காண வந்த முதல் நடிகரான தக்‌ஷன் விஜயை பார்த்ததும், ‘நான் யாருமில்லாத அனாதையாக இருக்கிறேன்’ என்று கூறி, கதறி அழுதார்.

அவர் அழுவதை பார்த்த நடிகர் தக்‌ஷன் விஜயும் கண்கலங்கி விட்டார். பிறகு அவருக்கு ஆறுதல் கூறி, பெருந்தொகை செலவிற்கு கொடுத்துவிட்டு, வேண்டிய உதவிகளைச் செய்கிறேன் என்று தெரிவித்தார்.

நடிகர், நடிகைகள், திரைத்துறை பிரபலங்கள் ஆதரவற்ற தனக்கு உதவ வேண்டுமென்று கண்ணீர் விட்டு, கோரிக்கை வைத்தார் காதல் மல்லேஸ்வரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்