‘ஜேம்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ்’ ஜார்ஜ் வில்லியம்ஸ் தயாரிப்பில், பல படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய செந்தில் கே.வீரய்யா முதன்முறையாக இயக்கியுள்ள படம் ‘மானிடன்.’
கதையின் நாயகன் புதுமுகம் தினேஷ் சந்திரா. நாயகி புதுமுகம் சினேகா. வில்லனாக சேரன் ராஜ். காமெடி கதாப்பாத்திரத்தில் வேல்முருகன். ஊருக்கு நீதியையும் நியாயத்தையும் வழங்கும் ஊர்ப் பெரியவராக தயாரிப்பாளர் ஜேம்ஸ். இவர்களுடன் கண்ணபிரான் , பாஸ்கர் லட்சுமி, ராகவன், மீசை ராஜா உள்ளிட்ட புதுமுக நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.
கிராமத்தில் நடக்கும் கதை. ஊரை சாராயம், போதை வஸ்துகள், காவல் துறை எதுவுமே உள்ளே நுழையாமல் கட்டி காத்துவரும் ஊர் பெரியவர் ஜேம்ஸ். அவரை எதிர்த்து ஊரை எல்லா வகையிலும் சீரழிக்க நினைக்கும் சேரன் ராஜ். அவர் அத்தோடு நிற்காமல் இளம் காதலர்களைப் பிரிக்கவும் நினைக்கிறார். ஊர்ப் பெரியவர் அவர்களை சேர்த்து வைக்க போராடுகிறார். இப்படி பரபரப்பாக உருவாகியிருக்கிறது இந்த படம்.
காட்சிகள் புதுக்கோட்டை மாவட்டம் குளவாய்ப்பட்டி மற்றும் புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஊட்டி, தேனி உள்ளிட்ட இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது. படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
படக்குழு:-
ஒளிப்பதிவு – சுரேஷ் ரங்கா
எடிட்டிங் – ஆர் செல்வராஜ்
இசை – செளந்தர்யன், லோக பத்மநாபன்
பாடல்கள் – வ.கருப்பன்
நடனம் – ரத்னவேல்
மக்கள் தொடர்பு – பெருதுளசி பழனிவேல்

