சவாலான கதாபாத்திரங்களில் திறமை காட்டும் ஜான்வி கபூர். பலனாக நம்பர் 1 இடத்தில் ‘மிலி.’

டார்க் காமெடி சப்ஜெக்டில் ‘குட் லக் ஜெர்ரி’, ஹாரர் காமெடி சப்ஜெக்டில் ‘ரூஹி’, பயோகிராஃபிகல் ட்ராமா சப்ஜெக்டில் ‘குன்ஜன் சக்சேனா’ இப்படி தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் சவாலான பாத்திரங்களை ஏற்று திறமையை வெளிப்படுத்தி வருகிற ஜான்வி கபூர் சமீபத்தில் வெளியான ‘மிலி’ படத்திலும் தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.சவாலான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஜான்வி கபூர் தயங்கியதில்லை. அதுபோன்ற படங்களை அவர் தவிர்த்ததும் இல்லை.

அந்த வகையில் சர்வைவல் டிராமா சப்ஜெக்டில் உருவாகி நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகிய ‘மிலி’ படத்தின் கதை ரசிகர்களையும் சினிமா ஆர்வலர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜான்வி கபூரின் திறமையான நடிப்புக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.‘கடின உழைப்பு வீண் போகாது என்பதற்கு உதாரணமாக நடிகை ஜான்வி கபூரின் உழைப்பும் அவரது சமீபத்திய திரைப்படங்களின் தேர்வும் இருக்கிறது’ என பாராட்டுகள் குவிந்து வருகிறது.

அப்படியான வரவேற்பைத் தொடர்ந்து ‘மிலி’ திரைப்படம் இந்தியன் ஓடிடி களத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளது. சினிமா பிரியர்கள் மத்தியில் டிரெண்டிங் டாபிக்காகவும் உள்ளது. இதனால் படக்குழு மகிழ்ச்சியடைந்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here