‘ஆசியாவின் சிறந்த படம்.’ மாமனிதனுக்கு சர்வதேச விருதும் தங்கப் பதக்கமும்… இணையத்தில் கொண்டாடும் விஜய் சேதுபதி ரசிகர்கள்!

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில், ‌சீனு ராமசாமியின் இயக்கத்தில் வெளியான ‘மாமனிதன்’ திரைப்படம் ‘ஆஹா’ டிஜிட்டல் தளத்தில் வெளியாகி, குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனைப் படைத்து வருகிறது.

இந்நிலையில் ‘மாமனிதன்’, ‘ஆசிய நாடுகளுக்கான சிறந்த படம்’ என தேர்ந்தெடுக்கப்பட்டு, டோக்கியோ திரைப்பட விருதுக்கு தேர்வாகி தங்கப் பதக்கம் வழங்கப்பட்டிருக்கிறது.

அதையடுத்து படக் குழுவினருக்கு தமிழ் திரையுலகினர் மட்டுமல்லாமல் இந்திய திரை உலகினரும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து வருகிறார்கள். இந்த அங்கீகாரத்தை விஜய் சேதுபதி ரசிகர்களும் இணையத்தில் வைரலாக்கி கொண்டாடி வருகிறார்கள்.

‘டோக்கியோ திரைப்பட விருது’ பற்றி… ஜப்பான் நாட்டில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாக்களில் ‘டோக்கியோ திரைப்பட விருது’ எனும் சர்வதேச திரைப்பட விழாவும் ஒன்று. திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி துறையை சார்ந்த நிபுணர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த படைப்பாளிகள் ஒருங்கிணைந்து வழங்கும் இந்த ‘டோக்கியோ திரைப்பட விருது’ சர்வதேச அளவிலான கலைஞர்களின் சிறந்த விருதாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here