புதுமையான ஹாரர் திரில்ல கதைக்களத்தில் பரத் – வாணி போஜன் நடித்துள்ள படம் ‘மிரள்.’ M சக்திவேல் இயக்கத்தில், அக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி ஜி. டில்லி பாபு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
அதையொட்டி படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். 
நிகழ்ச்சியில் நடிகர் பரத், ”இந்த படத்தில் நிறைய உணர்வுபூர்வமான அம்சங்கள் இருக்கிறது. கே எஸ் ரவிக்குமார் சாருடனும், வாணி போஜனுடனும் நடித்தது பெரிய மகிழ்ச்சி. சினிமாவில் நிறைய மோசமான அனுபவங்கள் உள்ளது. ஒரு படம் உருவாவது அவ்வளவு எளிதில்லை. தயாரிப்பாளர் டில்லிபாபு அனைவரையும் மதிக்க கூடிய நபர். இந்த கதை பற்றியும், இயக்குநர் பற்றியும் நான் சொன்னபோது, கதையின் தன்மையைப் புரிந்து கொண்டு தயாரிக்க ஒத்துகொண்டார். தயாரிப்பாளர், நடிகர், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருடனும் ஒத்து போகக்கூடிய நபர் இந்த படத்தின் இயக்குநர். அதனால் படம் நன்றாக வந்துள்ளது” என்றார்.
நடிகை வாணி போஜன், ஒட்டு மொத்த படக்குழுவும் முழு அர்ப்பணிப்பை கொடுத்து, இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இணைந்து நடிப்பதற்கு பரத் மிகச்சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது. உங்கள் எல்லோருடைய ஆதரவும் எங்களுக்கு தேவை” என்றார்.
விநியோகஸ்தர் சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன், ”இந்த படத்தை 20 நாட்களில் முடித்துள்ளனர். நான் படம் பார்த்து விட்டேன். படம் 20 நாளில் எடுத்தது போல் இருக்காது. மிகப்பெரிய பிரமிப்பை தரும் படைப்பாக உள்ளது. தமிழ் சினிமாவுக்கு புதுமையான ஒரு ஹாரர் படத்தை தந்துள்ளார்கள். படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும்” என்றார்.
படம் பற்றி…
மிரள்’ படத்தில் பரத், வாணி போஜனுடன் கே.எஸ்.ரவிக்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி, மாஸ்டர் அங்கித், மாஸ்டர் சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படக்குழு:- M.சக்திவேல் (கதை- வசனம்-இயக்கம்), பிரசாத் S.N. (இசை), சுரேஷ் பாலா (ஒளிப்பதிவு), கலைவாணன் R (எடிட்டர்), மணிகண்டன் சீனிவாசன் (கலை), டேஞ்சர் மணி (ஸ்டண்ட்), சச்சின் சுதாகரன்-ஹரிஹரன் M – Sync Cinema (ஒலி வடிவமைப்பு), கவின் முதல்வன் (ADR), அரவிந்த் மேனன் ( ஒலி கலவை), ஸ்ரீதேவி கோபாலகிருஷ்ணன் (ஆடை வடிவமைப்பாளர்), M முகமது சுபையர் (ஆடைகள்), வினோத் சுகுமாரன் (மேக்கப்), G.S. முத்து – Accel Media (DI-கலரிஸ்ட்), கிரண் ராகவன் – Resol FX (VFX மேற்பார்வையாளர்), E ராஜேந்திரன் (ஸ்டில்ஸ்) , சந்துரு – தண்டோரா (பப்ளிசிட்டி டிசைன்), சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன் (மக்கள் தொடர்பு), DEC (புரமோஷன் மற்றும் மார்க்கெட்டிங்), பால முருகன் (தயாரிப்பு மேலாளர்).

