நயன்தாராவின் பிறந்தநாளில் அவரைப் பற்றிய டாக்குமெண்ட்ரியை வெளியிடும் நெட்ஃபிலிக்ஸ்!

நடிகை நயன்தாரா அவர் வாழ்க்கையில் சந்தித்த ஏற்ற இறக்கங்கள், சினிமாவில் அவரது வெற்றிமுகம், திருமணம் ஆகியவை குறித்து எடுத்துரைக்கும் ‘விதத்தில் தயாராகியிருக்கிறது ‘நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’ என்ற டாக்குமெண்ட்ரி.

இதில் நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அதிகம் வெளியில் பகிரப்படாத இதுவரை கண்டிராத அழகிய பக்கத்தை ரசிகர்கள் கண்டு களிக்கலாம். அது தங்கள் கனவுகளையும் இலக்குகளையும் அடைய நினைப்பவர்களுக்கான உத்வேகமாக இருக்கும். மகளாக, சகோதரியாக, வாழ்க்கைத் துணையாக, அம்மாவாக, தோழியாக, தொழில்துறையில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக அவரது பல முகங்களின் தொகுப்பாகவும் இருக்கும்.

இந்த டாக்குமெண்ட்ரி நயன்தாராவின் பிறந்தநாளான நவம்பர் 18 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் எக்ஸ்க்ளூசிவாக ப்ரீமியராகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here