Home பொது இது வித்தியாசமான கிரைம் திரில்லர்; இயக்குநர் பலராம் கிருஷ்ணா ஒவ்வொரு காட்சியையும் மிகுந்த கவனத்துடன் உருவாக்கியிருக்கிறார்!...

இது வித்தியாசமான கிரைம் திரில்லர்; இயக்குநர் பலராம் கிருஷ்ணா ஒவ்வொரு காட்சியையும் மிகுந்த கவனத்துடன் உருவாக்கியிருக்கிறார்! -நிறம் பட விழாவில் நாயகன் முகேன்

முகேன் நடிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள படம் ‘நிறம்.’ இந்த படm விரைவில் வெளியாகவுள்ள நிலையில் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் இயக்குநர் பலராம் கிருஷ்ணா பேசியதாவது
எல்லோருக்கும் வணக்கம். இன்று ஒரு இயக்குநராக உங்கள் முன் நிற்பது என் வாழ்க்கையின் மிகப்பெரிய கனவு நிறைவேறிய தருணம். பல வருடங்களாக நான் இந்த வாய்ப்புக்காக காத்திருந்தேன். என்னை நம்பிய குடும்பத்தினர், நண்பர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் முழு படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி. “நிறம்” என்பது ஒரு சாதாரண தலைப்பு அல்ல. ஒவ்வொரு மனிதனின் மனநிலையும், குணமும், சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். அந்த மாற்றங்கள்தான் இந்த படத்தின் மையக் கருத்து. இது ஒரு கிரைம்-இன்வெஸ்டிகேஷன் திரில்லர். ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. இமான் சார், முகன், நிதின் சத்யா மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பால் இந்த படம் உருவாகியுள்ளது. நல்ல உள்ளடக்கத்தை மக்கள் எப்போதும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த படத்தை உங்களிடம் ஒப்படைக்கிறேன். உங்கள் ஆதரவு எங்களுக்கு மிகவும் முக்கியம்.
நாயகன் முகேன் பேசியதாவது
அனைவருக்கும் வணக்கம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகனாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. “நிறம்” ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லர். இந்த படத்தில் நடிக்க என்னை நம்பி வாய்ப்பு கொடுத்த இயக்குநர் பலராம் கிருஷ்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றி. அவர் ஒவ்வொரு காட்சியையும் மிகுந்த கவனத்துடன் உருவாக்கியிருக்கிறார். படப்பிடிப்பின் போது எங்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுத்து, கதாபாத்திரங்களை சிறப்பாக வெளிப்படுத்த உதவினார். இமான் சார் இசையில் நடிப்பது எனக்கு ஒரு கனவு நிறைவேறியது. நிதின் சத்யாவுடன் பணியாற்றியது ஒரு நல்ல அனுபவம். தயாரிப்பாளர், தொழில்நுட்பக் குழுவினர், பாடகர்கள், பாடலாசிரியர்கள் என அனைவரும் இந்த படத்திற்காக மனதார உழைத்திருக்கிறார்கள். இந்த படத்தை அனைவரும் திரையரங்கில் பார்த்து ஆதரித்து வெற்றி பெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நடிகை தான்யா ஹோப் பேசியதாவது
எல்லோருக்கும் வணக்கம். “நிறம்” திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த அழகான வாய்ப்பை அளித்த இயக்குநர் பலராம் கிருஷ்ணாவுக்கும், என்னை இந்த படத்தில் இணைத்த நிதின் சத்யாவுக்கும் என் மனமார்ந்த நன்றி. சங்கர் மாஸ்டரின் நடன அமைப்பு இந்த பாடலை இன்னும் அழகாக்கியுள்ளது. முழு படக்குழுவும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளது. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அனைவருக்கும் என் வாழ்த்துகளும் நன்றிகளும்.
நடிகர் நிதின் சத்யா பேசியதாவது
எல்லோருக்கும் வணக்கம். “நிறம்” திரைப்படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம். இந்த படம் ஒரு நட்பின் அடிப்படையில் உருவானது. இயக்குநர் பலராம் கிருஷ்ணாவுடன் எனக்கு பல வருடங்களாக நட்பு உள்ளது. அதனால் இந்த படத்தில் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், பல விஷயங்களில் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தேன். படக்குழுவில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுடைய முழு உழைப்பையும் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக இமான் சார் இந்த படத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் இசையமைத்துள்ளார். இயக்குநரின் அர்ப்பணிப்பும், தயாரிப்பாளரின் நம்பிக்கையும் இந்த படத்தின் பலம். முதல் படம் என்ற எண்ணமே வராத அளவுக்கு பலராம் கிருஷ்ணா சிறப்பாக இயக்கியிருக்கிறார். இந்த நல்ல படத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது ஊடக நண்பர்களின் கையில்தான் இருக்கிறது. அனைவரும் படம் பார்த்து மனதார ஆதரித்து, நேர்மையான கருத்துக்களை பகிர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இசையமைப்பாளர் டி. இமான் பேசியதாவது
“நிறம்” திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த படத்தின் கதையை கேட்டவுடனேயே இதில் ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லர் இருப்பதை உணர்ந்தேன். இயக்குநர் பலராம் கிருஷ்ணா தனது முதல் படத்திலேயே அனுபவமிக்க இயக்குநரைப் போல தெளிவான பார்வையுடன் பணியாற்றியிருக்கிறார். கதாநாயகன் முகன், நிதின் சத்யா மற்றும் அனைத்து கலைஞர்களும் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள். பாடலாசிரியர்கள் விவேகா, பா. விஜய், எடிட்டர் சாபு ஜோசப் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவரின் பங்களிப்பும் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம்.அனைவரும் திரையரங்கில் பார்த்து ஆதரித்து, இந்த படக்குழுவின் உழைப்பை பாராட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்