‘நியூஸ் 7 தமிழ்’ தொலைக்காட்சி நடத்திய Business excellence award 2026 விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னை ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. சாதனை படைத்த முன்னணி தொழிலதிபர்கள், வளரும் தொழிலதிபர்கள், தங்கள் துறையில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

மாண்புமிகு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் திரு. ஜி கே எம் தமிழ்க்குமரன், வேலம்மாள் குழுமம் எம்.வி.எம்.வேல்மோகன் ஆகியோர் விருதுகளை வழங்கி சிறப்பித்தனர். பிரபல தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் கண்ணன் ரவி, ஆச்சி மசாலா ஐசக் உட்பட பலருக்கும் விருது வழங்கப்பட்டது.

விருதுகளை வழங்கியபின் தொழிலதிபர்களை ஜி கே எம் தமிழ்க்குமரன் வாழ்த்திப் பேசினார். இது போன்ற விருதுகள் உற்சாகம் அளிக்கும். வாழ்வில் உயர உத்வேகத்தை கொடுக்கும். தொடர்ச்சியாக இந்த விழா நடக்க வேண்டும், விருதுகளை பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் என்றார்.

