‘நீலம் இரவு பாடசாலை’யின் ஊக்குவிப்பு! வனப்பகுதியிலிருந்து உருவாகிறார் முதல் வழக்கறிஞர்!

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டமன்றத் தொகுதி, தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள சந்தனப்பள்ளி பஞ்சாயத்து பெரிய பூதுக்கோட்டை பகுதியில் 65 வீடுகள் உள்ளன.

அந்த கிராமத்தில் ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த ராதிகா. அவருடைய தந்தை பெயிண்டர் தொழில் செய்து வருபவர்.  தாயார் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள். ராதிகா இரண்டாவது குழந்தை.பெரிய பூதுக்கோட்டை கிராமத்தில் அரசு சார்ந்து எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் யானைகள் நடமாடும் வனப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். தினமும் நடந்தே தேன்கனிக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று வந்து +2 வகுப்பில் 478/600 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதல் நபராக வந்துள்ளார்.தொடர்ந்து 4 1/2 ஆண்டாக நீலம் பண்பாட்டு மையம் சார்பாக டாக்டர் அம்பேத்கர் அரசியல் பள்ளியின் நீலம் இரவு பாடசாலை மாணவராக சேர்ந்து படித்து இன்று அப்பகுதிக்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார். மூன்று மாதங்களுக்கு மூன்பு இயக்குநர் பா இரஞ்சித் பெரிய பூதுக்கோட்டை நீலம் இரவு பாடசாலைக்கு வருகை தந்து, அனைவரையும் பாராட்டினார். மேலும் சமூக கல்வி சமூக அரசியலை கற்பிக்க நம் அனைவரும் இப்பள்ளியின் மூலம் மேம்படுத்தலாம் என்று மக்களிடம் தெரிவித்தார்.தொடர்ந்து டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் கீழ் இயங்குகிற திருப்பூர் சட்ட கல்லூரிக்கு தேர்வு செய்ய பட்டுள்ளார் சகோதரி ராதிகா. அவரின் விடா முயற்சி பலருக்கும் பாடம்!

குறிப்பு: இவரது பகுதிக்கு தார் சாலை அமைக்கவும், சுடுகாடு அமைக்கவும் 10 ஆண்டுகாலமாக கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here