இந்தியாவின் மிகப்பெரிய ஹோம் லிஃப்ட் பிராண்டான நிபவ் ஹோம் லிஃப்ட்ஸ் (NIBAV Home Lifts), ஹோம் லிஃப்ட்ஸ் உற்பத்திக்கான தனது இந்திய செயல்பாடுகள் விரிவாக்கப்படுவதை இன்று மகிழ்ச்சியுடன் அறிவித்திருக்கிறது.சென்னை மாநகரின் கிழக்கு கடற்கரை சாலையையொட்டி அமைந்துள்ள ‘அக்கரை’ பகுதியில், 50,000 சதுரஅடி பரப்பளவில் தனது நான்காவது உற்பத்தி தொழிலகம் தொடங்கப்படுவதை இந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. உலகின் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு நவீனமான புதிய ஹோம் எலிவேட்டர் (இல்லங்களுக்கான மின்தூக்கி) தயாரிப்பு தொழிலகம் இங்கு அமையவிருக்கிறது. ஐரோப்பிய தரநிலைகளுக்கேற்ப இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹோம் லிஃப்ட்களை 14 வெளிநாடுகளை உள்ளடக்கி சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கும் சந்தைக்கு அதிக அளவில் அனுப்புவதற்கு, இந்த கூடுதல் உற்பத்தித்திறன் நிபவ் நிறுவனத்திற்கு உதவும். அதே நேரத்தில் இந்நிறுவனத்தின் பிரதான சந்தையாக இந்தியா தொடர்ந்து இருக்கும்.
டிசம்பர் 2023 இறுதிக்குள் 4,500-க்கும் அதிகமான பணியாளர்களை சேர்க்கிற தனது ஆட்சேர்ப்பு திட்டத்தையும் நிபவ் ஹோம் லிஃப்ட்ஸ் அறிவித்திருக்கிறது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் மொத்த பணியாளர்களது எண்ணிக்கை 6000 ஆக உயரும். இந்நிறுவனத்தின் ECO வலையமைப்பு (எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் மற்றும் அலுவலகம்) இந்தியாவிலும், உலகளவிலும் விரிவாக்கப்படும் செயல்பாட்டில் புதிதாக சேர்க்கப்படும் பெரும்பாலான பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். அதுமட்டுமன்றி இத்தொழில்துறையில் திறனும், அனுபவமும் உள்ள சிறந்த பணியாளர்களின் சேர்க்கை, புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் உயர்தொழில்நுட்ப திறன் கொண்ட கார்பரேட் அலுவலகம், நான்கு உற்பத்தி தொழிலகங்கள் மற்றும் 2 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மேலும் மேம்படுத்தப்படுவதற்கு இது உறுதுணையாக இருக்கும்.
நிபவ் ஹோம் லிஃப்ட்ஸ்-ன் நிறுவனரும், தலைமைச் செயல் அலுவலருமான விமல் ஆர். பாபு, இது தொடர்பாக பேசும்போது, “டிசம்பர், 2019-ல் தொடங்கப்பட்டதிலிருந்தே நிபவ் ஹோம் லிஃப்ட்ஸ், வலுவான பிசினஸ் வளர்ச்சியை தொடர்ந்து கண்டுவருகிறது. 2021ம் ஆண்டில் ரூ. 150 கோடி என்ற விற்பனை மதிப்பு 2022-ம் ஆண்டில் 400 கோடியாக உயர்ந்திருக்கிறது; இந்த 2023 காலண்டர் ஆண்டின் முதல் காலாண்டிற்குள்ளேயே 1000 லிஃப்ட்கள் விற்பனை மைல்கல்லை நாங்கள் வெற்றிகரமாக கடந்து புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறோம். இல்லத்திற்குள் மொபிலிட்டி தீர்வுகள் பிரிவில் வீட்டு உரிமையாளர்களுக்கு தேவைப்படுவதை சிறப்பாகவும், மிகத் துல்லியமாகவும் எங்களால் வழங்கமுடியும் என்பதற்கு சான்றாக 2022-ம் ஆண்டில், இந்தியாவைக் கடந்து சர்வதேச அளவில் எமது விரிவாக்க செயல்பாடு தொடங்கியது. புதிய உற்பத்தி தொழிலகம் இப்போது தொடங்கப்படுவதால், உலகளவிலான ஹோம் லிஃப்ட் பிரிவிலும் எமது நிறுவனத்தின் வளர்ச்சி மேலும் வேகம் எடுக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
உலகளவில் ஹோம் லிஃப்ட்களுக்கான தேவை அதிகரித்துவரும் நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கும் போக்கும் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் 2024 டிசம்பர் மாதத்திற்குள் உலகளவில் ஹோம் லிஃப்ட் விற்பனையில் முதன்மையான இந்திய பிராண்டாக வளர்ச்சியடைய வேண்டும் என்ற இலக்கை நோக்கி நாங்கள் பயணித்து வருகிறோம். 1 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் பட்டியலில் நாங்கள் இடம்பெறுவதை இது சாத்தியமாக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.”
பணிக்கு ஆட்சேர்ப்புக்கான திட்டங்கள் பற்றி விமல் ஆர். பாபு மேலும் பேசுகையில், “நிபவ் ஹோம் எலிவேட்டர்களுக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் கனடா, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் பிற நாடுகளிலும் வாடிக்கையாளர்களின் தேவை மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருவதை நாங்கள் கண்டுவருகிறோம். இத்தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தோடு எமது மனிதவளத்துறையை நாங்கள் ஏற்கனவே வலுப்படுத்தியிருக்கிறோம்.
இத்தொழில்துறையைச் சேர்ந்த 4500-க்கும் அதிகமான திறனும், அனுபவமும் கொண்ட நிபுணர்களையும், பணியாளர்களையும் நிபவ் குடும்பத்தில் இணைக்கும் பணியை இப்போது நாங்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். நடப்பு காலண்டர் ஆண்டான 2023-க்குள் 6000-க்கும் அதிகமான பணியாளர்களுடன், முதியவர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் நாடுகளில் எமது சந்தை தலைமைத்துவத்தை மேலும் வலுவாக நாங்கள் நிலைநாட்டவிருக்கிறோம். உலகின் மிகச்சிறந்த ஹோம் லிஃப்ட்களை தயாரித்து வழங்குவதன் மூலம் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டிற்குள் எளிதான மற்றும் சவுகரியமான மொபிலிட்டி அனுபவங்களை சாத்தியமாக்கும் எமது குறிக்கோளோடு நாங்கள் முனைப்புடன் பணியாற்றுகிறோம்” என்று கூறினார்.
இந்த இரு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட ஊடகவியலாளர் சந்திப்பு நிகழ்வின் ஒரு அங்கமாக, தனது சமீபத்திய ஹோம் எலிவேட்டர் தயாரிப்பான சீரீஸ் 3 மேக்ஸ்-ஐ நிபவ் ஹோம் லிஃப்ட்ஸ் வெளியிட்டு அறிமுகம் செய்திருக்கிறது. சீரீஸ் 3 மேக்ஸ் லிஃப்ட் என்பது உலகின் மிகப்பெரிய வீட்டிற்குள் பயன்படுத்தப்படும் மின்தூக்கியாகும். 240 கிலோகிராம் திறனுடன் G+3 வரை அமைக்கப்படக்கூடிய இந்த லிஃப்ட் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், சிறப்பான ஆற்றல் திறன், அழகான, நவீன வடிவமைப்பு ஆகியவை இதனை மேலும் சிறப்பான தயாரிப்பாக ஆக்கியிருக்கிறது. இப்புதிய தயாரிப்பின் மூலம் இத்தொழில்துறையில் ஒரு புதிய நேர்த்தி தரநிலையை நிபவ் ஹோம் லிஃப்ட்ஸ் நிலைநாட்டுகிறது. உயர்தரமான அனுபவத்தை இதன் பயனாளிகள் நிச்சயமாக பெறமுடியும்.