இரண்டே மாதங்களில் புதிய முடி வளர ‘வாடிகா நீலிபிரிங்கா 21’ ஹேர் ஆயில்! ‘டாபர் இந்தியா லிமிடெட்’டின் புத்தம்புது அறிமுகம்!!

முடி உதிர்வைக் குறைக்க, இரண்டே மாதங்களில் புதிய முடி வளர டாபர் இந்தியா லிமிடெட், வாடிகா நீலிபிரிங்கா 21 என்ற ஹேர் ஆயிலை அறிமுகப்படுத்துகிறது.

14 ஆயுர்வேத மூலிகைகளின் சக்தியைக் கொண்டு, பழங்கால ஆயுர்வேத முறையான டெயில் பாக் விதியால் உருவாக்கப்பட்டது இந்த ஹேர் ஆயில்.

இரண்டு மாதங்களில் புதிய முடி வளரும் என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது இதன் தனித்துவம்.

இந்த ஹேர் ஆயில் பற்றி எடுத்துச் சொல்வதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில், டாபர் இந்தியா லிமிடெட்டின் சந்தைப்படுத்தல் பிரிவின் துணைத் தலைவர் அபிஷேக் ஜுக்ரன், “வாடிகா ஹவுஸ் ஆஃப் டாபரின் முதன்மையான முடி பராமரிப்பு பிராண்ட். பல ஆண்டுகளாக மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களின் விருப்பமான ஹேர் ஆயிலாக இதனை உருவாக்கியுள்ளோம். நீலி, பிரிங்ராஜ், திராக்ஷா, யஷ்டிமது போன்ற 14 ஆயுர்வேத மூலிகைகளின் சக்தியைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஆகவே இந்த ஹேர் ஆயில் முடி உதிர்வின் முக்கிய அறிகுறிகளை எதிர்த்துப் போராட, புதிய முடி வளர, முடியின் வேர்களை வலுப்படுத்த, முடி மெலிதாகுவதை குறைக்க என 21 பயன்பாடுகளை கொண்டிருக்கும். பலவிதங்களில் செயலாற்றும்” என்றார்.

டாபர் இந்தியா லிமிடெட் ஹேர் கேர் நிறுவனத்தின் ஜிஎம் அங்கூர் குமார், “எங்களின் இந்த புதிய ஹேர் ஆயிலின் தயாரிப்பில் பயன்படுகிற ஆயுர்வேத விஞ்ஞானத்தைப் பற்றி நுகர்வோருக்குக் கற்பிப்போம். முடி உதிர்தல் பற்றிய கட்டுக்கதைகளை உடைப்போம். மக்களிடம் உரையாடுவோம். மாதிரி எடுப்போம். இந்த ஹேர் ஆயிலில் இருக்கிற மூலப்பொருட்களின் நன்மைகளைப் பற்றி அச்சு, காட்சி, சமூக ஊடகங்கள் வழியாக நுகர்வோருக்கு புரியவைப்போம். அதன் மூலம் பெரும்பாலான மக்களிடம் இந்த தயாரிப்பு போய்ச் சேரும்” என்றார்.

என்னென்ன அளவுகளில், என்னென்ன விலைகளில் கிடைக்கும்?

புதிய வாடிகா நீலிபிரிங்கா 21 ஹேர் க்ரோத் ஆயில் 50 மிலி, மற்றும் 100 மிலி என்ற அளவுகளில் ரூ. 199, ரூ. 399 விலையில் கிடைக்கும். முன்னணி இ – காமர்ஸ் தளங்களிலும் வழக்கமான முன்னணி மற்றும் சில்லறை வர்த்தக கடைகளிலும் கிடைக்கும்.

டாபர் இந்தியா லிமிடெட் பற்றி:-
Dabur India Ltd is one of India’s leading FMCG Companies. Building on a legacy of quality and experience for 138 years, Dabur is today India’s most trusted name and the world’s largest Ayurvedic and Natural Health Care Company. Dabur India’s FMCG portfolio includes nine Power Brands: Dabur Chyawanprash, Dabur Honey, Dabur Honitus, Dabur Lal Tail and Dabur Pudin Hara in the Healthcare category; Dabur Amla, Vatika and Dabur Red Paste in the Personal care space; and Réal in the Foods category.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here