Home சினிமா தமிழ் ரசிகர்கள் புதியவர்களை இதயத்திலிருந்து உண்மையான அன்புடன் வரவேற்கிறார்கள்! -உற்சாகத்தில் மிதக்கும் நடிகர் ருத்ரா

தமிழ் ரசிகர்கள் புதியவர்களை இதயத்திலிருந்து உண்மையான அன்புடன் வரவேற்கிறார்கள்! -உற்சாகத்தில் மிதக்கும் நடிகர் ருத்ரா

தமிழ் சினிமா எப்போதும் புதிய திறமைகளை விரிவான அன்போடு ஏற்கும் சிறப்பைக் கொண்டது. அந்த அன்பைப் பெரும் வரவேற்புடன் பெற்று கொண்டிருக்கிறார் நடிகர் ருத்ரா, இவர் கடந்த வாரம் வெளியான ‘ஓஹோ எந்தன் பேபி’ என்ற நகைச்சுவையான காதல் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளார்.

ருத்ராவின் இயல்பு வாய்ந்த வசீகரம், வெள்ளந்தியான முகபாவனைகள், நேர்த்தியான நடிப்பு ஆகியவை, குறிப்பாக பெண்கள் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது திரையிடையிலான இயல்பு மற்றும் நடிப்பிற்கான அர்ப்பணிப்பு, நம்பிக்கையைத் தூண்டும் புதிய ஓர் எழுச்சியாக பாராட்டப்பட்டு வருகிறது. இத்தனை ஆதரவையும் உற்சாகத்தையும் சந்திக்கும் இந்த இளம் நடிகர் தன் கண்களில் கண்ணீர் வைக்கும் அளவுக்கு நெகிழ்ந்துள்ளார்.

அவரிடம் பேசியபோது, “ஒரு நடிகனாக இந்த அளவுக்கு அன்பும் ஆதரவும் பெறுவது மிகவும் நெகுழ்ச்சியான தருணம் . என் அண்ணன் விஷ்ணு விஷால் அவர்களின் ரசிகர்களிடம் எவ்வளவு நெருக்கமாக இருப்பாரோ , அதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அதை நானே உணர்வது இதுவே முதல் முறை. உண்மையிலேயே இது ஒரு மாயாஜாலம் போலிருக்கிறது. தமிழ் ரசிகர்கள் புதியவர்களை அவர்கள் இதயத்தில் இருந்து உண்மையான அன்புடன் வரவேற்கிறார்கள். ‘ஓஹோ எந்தன் பேபி’க்கு கிடைக்கும் பாராட்டுகள் என் மனதை நெகிழ வைக்கின்றன. இந்த கதாபாத்திரத்தை எனக்குக் கொடுத்து எனக்கு இது போன்ற வாய்ப்பை தந்த இயக்குநர் கிருஷ்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தக் கதாபாத்திரம் எனக்குள் பல உணர்வுகளை வெளிப்படுத்த ஒரு அருமையான வாய்ப்பாக இருந்தது , சவால்களுடனும் சந்தோஷத்துடனும். என் கனவுகளை ஊக்குவித்த என் அப்பா மற்றும் அண்ணனுக்கும், என் சகநடிகர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். திரைப்படத் துறையிலிருந்தும், ரசிகர்களிடமிருந்தும், ஊடகங்களிடமிருந்தும் கிடைத்துள்ள அன்பு, எனது எதிர்கால படைப்புகளில் சிறப்பாக வேலை செய்ய வேண்டிய ஆர்வத்தையும் தன்னம்பிக்கையையும் தருகிறது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்