Home சினிமா நவம்பர் 7 எங்களின் தீபாவளி! -மெடிக்கல் கிரைம் த்ரில்லராக உருவாகியுள்ள அதர்ஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில்...

நவம்பர் 7 எங்களின் தீபாவளி! -மெடிக்கல் கிரைம் த்ரில்லராக உருவாகியுள்ள அதர்ஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ஆதித்யா மாதவன் உற்சாகம்

புதுமுகம் ஆதித்யா மாதவன் நாயகனாக அறிமுகமாகும் படம் ‘அதர்ஸ்’ அபின் ஹரிஹரன் இயக்கத்தில் மெடிக்கல் கிரைம் த்ரில்லராக உருவாகியுள்ளது.

படத்தில் ஆதித்யா மாதவனுக்கு ஜோடியாக கௌரி கிஷன், அஞ்சு குரியன் நடித்துள்ளனர். இந்த படம் வரும் நவம்பர் 7-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. அதையொட்டி படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

நிகழ்வில் பேசிய இயக்குநர் அபின் ஹரிஹரன், “ஒரு வருட பயணத்திற்குப் பிறகு ‘அதர்ஸ்’ உருவாகியுள்ளது. நான் புதுமுக ஹீரோவையே தேடினேன், அதற்காக ஆடிஷன் நடத்தி ஆதித்யா மாதவனை தேர்ந்தெடுத்தோம். அப்போது ஆடிஷனிலேயே அவர் அசத்தினார். கௌரி, அஞ்சு குரியன், ஹரீஷ் பேரடி உள்ளிட்ட பல அனுபவமுள்ள நடிகர்கள் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் சார் மிகப் பெரிய கேமராமேன் என்றாலும், எனது கற்பனையை திரையில் துல்லியமாகப் பதிவு செய்தார். ஜிப்ரான் சார் கதையின் உணர்வுகளை இசையில் உயிர்ப்பித்துள்ளார். ஆதித்யா கடின உழைப்பை தந்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள்” என்றார்.

நடிகர் ஆதித்யா மாதவன் “ஒரு புதிய ஹீரோவான என்னை நம்பி இப்படத்தில் பெரிய வாய்ப்பு தந்த இயக்குநர் அபின் அவர்களுக்கு நன்றி. அதிலும் அறிமுக ஹீரோவுக்கு இரண்டு ஹீரோயின்களை வைத்தது அவரின் மனதார்ந்த நம்பிக்கை. ஜிப்ரான் சார் இசை வருவது தெரிந்தவுடன் ரோட்டிலேயே டான்ஸ் ஆடினேன்! என்னை மிக அழகாக காட்டிய ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங்கிற்கு நன்றி. கௌரி, அஞ்சு குரியன் இருவரும் மிக நன்றாக இணைந்து நடித்தனர். நவம்பர் 7 எங்கள் தீபாவளி. நீங்களும் பார்த்து சொல்லுங்கள்” என்றார்.

நடிகை கௌரி கிஷன் “மீடியா நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி. அபின் சார் ஹாஸ்பிடலில் இருந்தபோது கதையைச் சொன்னார். அப்போது காட்சிகள் என் கண்முன் தோன்றியது. டீம் முழுவதும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளது. கிராண்ட் பிக்சர்ஸ் மிக அற்புதமாக இப்படத்தை எடுத்துள்ளனர். ஆதித்யா புதுமுகம் போல இல்லை; மிகவும் நன்றாக நடித்துள்ளார். ஜிப்ரான் சார் இசை மிக சிறப்பாக உள்ளது. படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.

இயக்குநர் அரவிந்த் “நான் இயக்குநராக இல்லாமல், புரொடக்ஷன் அணியிலிருந்து இங்கு இருப்பது மகிழ்ச்சி. ஜிப்ரான் மியூசிக் என்றவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. ஹீரோ புதுமுகம் என்றாலும் மெச்சியூராக நடித்துள்ளார். நமக்கு புதிய ஹீரோக்கள் தேவை. இயக்குநர் அபின் மலையாளி என்றாலும், தமிழை கற்றுக்கொண்டு திரைக்கதை எழுதியுள்ளார். முதல் படம் போலவே இல்லை, மிக அழகாக எடுத்துள்ளார். கௌரி கிஷன் மருத்துவராக சிறப்பாக நடித்துள்ளார். பிரதீப் புது ஹீரோவிடம் மிக அழகாக வேலை வாங்கியுள்ளார். ஜிப்ரான் எப்போதும் கதையின் உணர்வை இசையில் வெளிப்படுத்துவார்; இதிலும் அதையே செய்துள்ளார்” என்றார்.

இசையமைப்பாளர் ஜிப்ரான், ஸ்டண்ட் இயக்குநர் பிரதீப், இணைத் தயாரிப்பாளர் ஆதிராஜ் புருஷோத்தமன் உள்ளிட்டோரும் நிகழ்வில் படம் பற்றி பேசினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்