சென்னை, ஒயாசிஸ் கருத்தரித்தல் (Oasis Fertility) மையத்தில், ஐ.வி.எப். சிகிச்சைகள் மூலம் கருத்தரித்த தம்பதிகளை மகிழ்விக்கும் வகையில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
ஒயாசிஸ் கருத்தரித்தல் மையத்தின் மூத்த ஆலோசகர் மற்றும் கருவுறுதல் நிபுணர் டாக்டர் அபர்ணா விஸ்வகிரண், கருவுறுதல் நிபுணர் டாக்டர் டி.மகேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டனர். தங்கள் கணவரோடு வந்திருந்த தாய்மையடைந்த பெண்கள் கேக் வெட்டி உற்சாகமானார்கள்.
இந்த காலகட்டத்தில் வாழ்க்கைமுறை மாற்றம், குழந்தை பெற்றுக்கொள்ளுவதை தள்ளிப் போடுதல், பிசிஓஎஸ், உடல் பருமன் மற்றும் பல காரணங்களால் இக்காலகட்டத்தில் குழந்தையின்மை பிரச்சனை பெருகிவிட்டது. தாய்மையடைய பல கருவுறுதல் சிகிச்சை முறைகள் உள்ளன, ஆனால் தம்பதிகள் இதைப் பற்றி அறியாமல் வலி மற்றும் வேதனையில் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் ஐ.வி.எப் சிகிச்சை முறையை அனைவரும் அறிந்து கொள்வதும், ஐ.வி.எப். சிகிச்சையின் மீது நம்பிக்கை எற்படுத்துவதும் அவசியம். அதனை ஒயாசிஸ் கருத்தரித்தல் மையம் சிறப்பான முறையில் செய்து வருகிறது.
நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களிடம் டாக்டர் அபர்ணா விஸ்வகிரண் பேசும்போது, “கருவுறுதலில் சவாலான தம்பதிகளுக்கு உதவ பல மேம்பட்ட சிகிச்சை வழிமுறைகள் இருந்தாலும், விழிப்புணர்வு இல்லாதது, சிகிச்சையை ஒத்திவைப்பது போன்றவை கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தும். வயது ஏற ஏற பெண்களின் கருவுறுதல் தன்மை குறையும் என்ற உண்மையை அனைவரும் உணர வேண்டும். திருமணமான ஒரு வருடத்திற்குப் பிறகும் தம்பதியினர் கருத்தரிக்க முடியாவிட்டால், கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து கருவுறுதல் நிபுணரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ள வேண்டும்” என்றார்.
கருவுறுதல் நிபுணர் டாக்டர் டி மகேஸ்வரி பேசும்போது, “குழந்தையின்மை பிரச்சனைக்கு ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் முக்கிய பங்கு உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒயாசிஸ் கருத்தரித்தல் மையம் ஆண்களுக்கென பிரத்யேக ஆண் கிளினிக்குகளைக் கொண்டுள்ளது – ஆண்ட்ரோலைஃப் – இது ஆண் நோயாளிகளுக்கு மிகவும் தேவையான ஆறுதல், வழிகாட்டுதல், சிகிச்சை மற்றும் தனியுரிமையை வழங்குகிறது. தம்பதிகள் தங்கள் பெற்றோர் என்ற கனவை அடைய உதவும் வகையில் மேம்பட்ட கருவுறுதல் சிகிச்சைகளுடன் உணவு மற்றும் எடை மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முழுமையான அணுகுமுறையை நாங்கள் பின்பற்றுகிறோம்” என்றார்.
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஒயாசிஸ் கருத்தரித்தல் மையத்தில் சிகிச்சை மூலம் தாய்மையடைந்தவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். தங்கள் வாழ்வின் மிகப் பெரிய பரிசை பெறப்போவதில் ஒயாசிஸில் மருத்துவர்களும் ஊழியர்களும் எவ்வாறு பெரும் பங்கு வகித்தனர் என்பது பற்றி பேசினர். தாங்கள் தாய்மையடைவதற்கு உதவிய ஒயாசிஸ் மருத்துவர்களின் சிகிச்சை, அக்கறை மற்றும் வழிகாட்டுதலை நன்றியுணர்வுடனும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக எடுத்துச் சொன்னார்கள்.
ஒயாசிஸ் கருத்தரித்தல் மையம் பற்றி…
சென்னையின் முதன்மையான கருவுறுதல் சிகிச்சை மையங்களில் ஒன்றாக இருக்கிறது ஒயாசிஸ் கருத்தரித்தல் மையம். உயர்மட்ட கருவுறுதல் நிபுணர்கள் மற்றும் இந்தியாவின் சிறந்த சிகிச்சை வல்லுநர்களால் வழி நடத்தப்படுகிறது. முதன்மையான கருவுறுதல் சிகிச்சைகளை வழங்கி வருகிறது. இந்த மையத்தின் மூலம் ஆயிரக்கணக்கான தம்பதிகளின் பெற்றோராகும் கனவு நிறைவேறியுள்ளது.




