சிறப்புத் திரையிடலில் ‘பிதா’வை பார்த்து ரசித்த பிரபலங்கள்… பாராட்டுக்கள் குவிந்து படக்குழு குஷி!

இந்திய சினிமா வரலாற்றில் 23 மணி நேரம், 23 நிமிடங்களில் எடுக்கப்பட்டு வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிற ‘பிதா’ படத்தின் சிறப்புத் திரையிடலில் திரையுலகப் பிரபலங்கள் பார்த்து ரசித்தனர். பார்த்த அனைவருமே படத்தையும், படக் குழுவினரையும் வெகுவாக பாராட்டினார்கள். அதனால் படக்குழுவினர் குஷியாகியுள்ளனர்.

அதையடுத்து பத்திரிகையாளர் சந்திப்பும் நடந்தது. தயாரிப்பாளர்கள் ஜி.சிவராஜ், அன்புச் செழியன், ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனீஷ், இயக்குனர்கள் அரவிந்தராஜ், பேரரசு, கேபிள் சங்கர், எஸ்.சுகன், நடிகர்கள் மாஸ்டர் மகேந்திரன், ஆதேஷ் பாலா, சாம்ஸ், சம்பத்ராம், ஸ்ரீராம் சந்திரசேகர், மாரிஸ் ராஜா, மாஸ்டர் தர்ஷித், நடிகை ரிஹானா ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் ‘பிதா’ படத்தின் போஸ்டரை இயக்குநர்கள் அரவிந்தராஜ், பேரரசு, நடிகர் மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் வெளியிட்டனர்.

காது கேளாத, வாய் பேச முடியாத பத்து வயது சிறுவன், கடத்தப்பட்ட தொழில் அதிபரையும், தனது அக்காவையும் காப்பாற்றுவது தான் கதை.

ஆதேஷ் பாலா, சாம்ஸ், மாஸ்டர் தர்ஷித், ஸ்ரீராம் சந்திரசேகர், அனு கிருஷ்ணா, ரிஹானா, மாரீஸ் ராஜா, அருள்மணி ஆகியோர் நடித்துள்ளனர். எஸ்.சுகன் விறுவிறுப்பாக இயக்கியுள்ளார்.

எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி ஜி.சிவராஜ் தயாரித்துள்ள இப்படத்தை, தரமான சிறு முதலீட்டு திரைப்படங்களை தொடர்ந்து வெளியிடும் ‘ஆக்‌ஷன் ரியாக்‌ஷன்’ ஜெனிஷ் இந்த படத்தை வரும் ஜூலை 26-ம் தேதி உலகெங்கும் வெளியிடுகிறார்.

படக்குழு:-
வசனம்: பாபா கென்னடி
ஒளிப்பதிவு: இளையராஜா
இசை: நரேஷ்
எடிட்டர்: ஸ்ரீவர்சன்
கலை: கே.பி.நந்து
மக்கள் தொடர்பு: கோவிந்தராஜ்

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here