சத்தியத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் ‘ப்ராமிஸ்’ படத்தை இயக்கி கதையின் நாயகனாக நடித்துள்ளார் அருண்குமார் சேகரன். கதாநாயகியாக புதுமுகம் நதியா சோமு, மற்ற கதாபாத்திரங்களில் சுஜன், அம்ரிஷ் , பிரதாப், கோகுல், சுந்தரவேல், ராஜ்குமார், கலைவாணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் சேரன், நடிகர் நட்டி நட்ராஜ் ஆகியோர் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியிருக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குநர் அருண்குமார் சேகரன் பேசும்போது, “இந்த உலகில் ப்ராமிஸ் என்பது எவ்வளவு மதிப்புள்ளது என்பதைப் பற்றி இந்தப் படத்தில் பேசி இருக்கிறோம். அம்மா மீது வைக்கப்படும் ப்ராமிஸ் மிக மதிப்புள்ளது. உணர்ச்சிகரமானது. எனவே யாரும் அம்மா மீது அப்படி ப்ராமிஸ் செய்ய மாட்டார்கள். கணவன் மனைவிக்குள் காதலர்களுக்குள் இருக்கும் ப்ராமிஸ் என்பது மிகவும் மதிப்புள்ளது என்பதை இந்தப் படத்தில் கூறி இருக்கிறோம்.
ஒரு கட்டத்தில் அந்த ப்ராமிஸ் உடைக்கப்படும் போது, அந்த நம்பிக்கை சிதையும் போது அந்த வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் உணர்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கின்றன. அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தார்களா இல்லையா?என்பதே இந்தப் படத்தின் கதை” என்றார்.
படப்பிடிப்பு நடந்த இடங்களைப் பற்றிக் கூறும்போது, “ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள வெயில் நகரங்களான வேலூர், ராணிப்பேட்டை ஆற்காடு , குடியாத்தம், வாணியம்பாடி, ஒடுகத்தூர் அணைக்கட்டு போன்ற இடங்களில் பெரும்பாலான படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.பிச்சாவரம், கடலூர் பகுதிகளிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது.
இது முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது எனவே இந்தப் படத்தில் உயிரோட்டமான கதை மட்டுமல்ல,உணர்ச்சிகரமான கதை மாந்தர்களும் உள்ளனர்.அது படத்தின் மீது எங்களுக்குப் பெரிதும் நம்பிக்கை அளிக்கும் அம்சங்கள்” என்றார்.
பட வெளியிட்டுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. டிரெய்லர் வெளியீடு விரைவில்…
படக்குழு:-
ஒளிப்பதிவாளராக வினோத்குமார் DFT பணியாற்றி உள்ளார்.
சரவண தீபன் இசையமைத்துள்ளார்.படத்தொகுப்பு ஸ்ரீராம் விக்னேஷ், பாடலாசிரியர் பாலா, DI மணிகண்டன், நடனம் அகிலா பணியாற்றியுள்ளனர். சங்கமித்ரன் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் அம்மன் ஆர்ட் க்ரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.

