Home சினிமா சுந்தர் சி – விஷால் கூட்டணி இணையும் புருஷன் படத்தில் கதாநாயகியாக தமன்னா… விரைவில் தொடங்குது...

சுந்தர் சி – விஷால் கூட்டணி இணையும் புருஷன் படத்தில் கதாநாயகியாக தமன்னா… விரைவில் தொடங்குது படப்பிடிப்பு!

சுந்தர் சி – விஷால் கூட்டணி இணையும் நான்காவது படத்திற்கு புருசன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சுந்தர் சி – விஷால் – ஹிப்ஹாப் தமிழா கூட்டணி, ஆம்பள’ திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் இணைகிறது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ, அதிரடி மற்றும் நகைச்சுவை அம்சங்களுடன் ரசிகர்களை கவர்ந்து, சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. குறுகிய நேர வீடியோவிலேயே, சுந்தர் சி-யின் தனித்துவமான கமர்ஷியல் பாணி வெளிப்பட்டு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.

படத்தில் நாயகியாக தமன்னா நடிக்க, பிரபல நகைச்சுவை நடிகர் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கமர்ஷியல் கிங் சுந்தர் சியின் முத்திரையுடன், குடும்பத்தோடு ரசித்து கொண்டாடும் ஒரு முழுமையான கமர்ஷியல் எண்டர்டெயினராக புருஷன் உருவாகி வருகிறது. படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்