Home சினிமா இயக்குநர் கணேஷ் சந்திராவின் உழைப்பு திரையில் தெளிவாக தெரிகிறது; மீடியா, ரசிகர்கள் எல்லாரும் கண்டிப்பாக பாராட்டுவார்கள்!...

இயக்குநர் கணேஷ் சந்திராவின் உழைப்பு திரையில் தெளிவாக தெரிகிறது; மீடியா, ரசிகர்கள் எல்லாரும் கண்டிப்பாக பாராட்டுவார்கள்! -‘பூக்கி’ படவிழாவில் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி 

அஜய் திஷான் நடிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில், ரொமான்ஸ் காமெடி ஜானரில், இளைஞர்களை கவரும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘பூக்கி.’ இந்த படம் காதலர் தின கொண்டாட்டமாக வரும் பிப்ரவரி 13-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. பட வெளியீட்டை முன்னிட்டு படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர்.

நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி பேசியபோது, ”நீங்கள் இல்லாமல் நான் இல்லை. எப்போதும் எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த விழாவின் நாயகன் கணேஷ் சந்திரா. அவரை நான் முதலில் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தினேன் என்பதில் எனக்கு பெருமை. இன்று அவரை இயக்குநராக மீண்டும் அறிமுகப்படுத்துவது இன்னும் பெருமை. உங்கள் உழைப்பு திரையில் தெளிவாக தெரிகிறது.  மீடியா, ரசிகர்கள் எல்லாரும் கண்டிப்பாக பாராட்டுவார்கள்.

மலையாள சினிமா போல தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கும் முக்கியத்துவம் வர வேண்டும். அந்த வகையில் புதிய பரதி ஒரு முக்கியமான எழுத்தாளர். இந்த படத்துக்கு பிறகு அவர் பெரிய இடத்திற்கு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது. அஜய் – மிக நேர்மையான, உழைப்பாளி. முதலில் ஒரு நல்ல மனிதன். அதனால் தான் நல்ல நடிகனாகவும் பெரிய இடத்திற்கு வருவார். தனுஷா – மிகவும் புத்திசாலியான, திறமையான நடிகை. டயலாக் டெலிவரி, டப்பிங், நடிப்பு – எல்லாமே சிறப்பாக இருந்தது. இந்த படம் உங்களுக்கு நிறைய வாய்ப்புகளை கொண்டு வரும். இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்கள், தொழில்நுட்பக் குழு, எனக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பு குழு அனைவருக்கும் என் நன்றி. இந்த படம் பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியாகிறது. உங்கள் ஆதரவோடு இது பெரிய வெற்றியை பெறும் என்று நம்புகிறேன். இப்படத்தின் உரிமையை வாங்கிய Zee நிறுவனத்திற்கு நன்றி” என்றார்.

இயக்குநர் கணேஷ் சந்திரா பேசியபோது ”இவ்வளவு நாள் கேமராவுக்குப் பின்னாடி இருந்து மத்தவங்க சொல்ற ‘ஆக்ஷனை’ மட்டும் கேட்டுட்டு இருந்தேன். ஆனா இப்போ முதல் முறையா, ‘பூக்கி’ படத்தின் மூலமா கேமராவுக்கு முன்னாடி வந்து ‘ஆக்ஷன்-கட்’ சொல்ல ஆரம்பிச்சிருக்கேன்.

இந்த வாய்ப்பு தந்த விஜய் ஆண்டனி சாருக்கு என் மனமார்ந்த நன்றி. என் மீது அவர் வைத்த நம்பிக்கையை நான் கண்டிப்பாக காப்பாற்றியிருக்கிறேன். இந்த படத்தை வெறும் ஆறு மாதங்களில் முடித்திருக்கிறோம். இன்றைய சூழலில் ஒரு படத்தை விரைவாக முடித்து, வணிக ரீதியாகவும், வெளியீட்டிலும் ஒழுங்காக கொண்டு வருவது எளிதல்ல. Zee நிறுவனம் இப்படத்தை வாங்கி விட்டது. அதை சாத்தியமாக்கிய தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி சாருக்கு மிகப் பெரிய நன்றி. விஜய் ஆண்டனி சார் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. அவருடைய உழைப்புக்கு ஒரே விளக்கம் தான் “தொடர்ந்து முயற்சி செய். தவறாக இருந்தாலும் சரியாக வரும் வரை செய்” என்பார். இரவு, பகல் பாராமல் வேலை செய்யும் அந்த ஆற்றல் எங்களை எல்லோரையும் ஊக்கப்படுத்தியது. இந்த படத்தின் எழுத்தாளர் புதிய பரிதி, நாயகன் அஜய், நாயகி தனுஷா — இந்த மூன்று பேரும் இந்த படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு. இவர்களில்லாமல் இந்த படம் இப்படியாக உருவாகியிருக்காது. இயக்கக் குழு, இசை, எடிட்டிங், உடை வடிவமைப்பு, தயாரிப்பு குழு, அனைவரும் ஒரு குழுவாக அல்ல, ஒரு குடும்பமாக வேலை செய்தார்கள்.

அதனால்தான் இந்த படம் இவ்வளவு வேகமாகவும் அழகாகவும் உருவானது. இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த அனைவருக்கும், இந்த நிகழ்வுக்கு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் நன்றி” என்றார்.

நடிகர் அஜய் திஷான் பேசியபோது ”இந்த படம் எனக்கு ஒரு சாதாரண திரைப்படம் அல்ல. இது என் வாழ்க்கையில் கிடைத்த ஒரு பெரிய அனுபவம். நான் ஒருபோதும் நினைக்காத பல விஷயங்கள் இந்த படத்தின் மூலம் நடந்திருக்கிறது.

கதையை முதலில் படித்தபோதே, இந்த படம் மிகுந்த கவனத்தோடு, ஆழமான எழுத்துடனும் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதைக் உணர்ந்தேன். உண்மை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த கதையே என்னை மிகவும் பாதித்தது. இயக்குநர் கணேஷ் சந்திரா சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள். அவருடன் வேலை செய்வது மிகுந்த ஊக்கமும் நிம்மதியும் தரும் அனுபவமாக இருந்தது. அவருடன் இன்னும் நிறையப்படங்கள் வேலை செய்ய ஆசைப்படுகிறேன்.

படத்தில் உடன் நடித்த அனைவரும் பெரும் ஒத்துழைப்பு தந்தார்கள். தனுஷா நல்ல தோழியாக மாறி விட்டார். இந்த படத்தின் குழு அனைவரும் ஒரு குழுவாக அல்ல, ஒரு குடும்பமாகவே இருந்தார்கள். அவர்களில்லாமல் இந்த படம் இவ்வளவு சீக்கிரமாகவும் ஒழுங்காகவும் முடிந்திருக்காது. உடை வடிவமைப்பாளர் மாளவிகா அவர்களுக்கும், நடன இயக்குநர் அவர்களுக்கும் என் சிறப்பு நன்றிகள். இந்த படம் எனக்கு ஒரு வேலை போல அல்ல; இன்னொரு வீட்டில் இருப்பது போலவே இருந்தது. அந்த அளவுக்கு அன்பும், நம்பிக்கையும் இந்த குழுவில் இருந்தது. என்னை ஆரம்பத்திலிருந்தே நம்பி ஆதரித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த படம் உங்களுக்கும் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்