Home சினிமா ‘பேட்ரியாட்’ திரைப்படத்திலிருந்து நயன்தாராவின் கேரக்டர் லுக் வெளியானது!

‘பேட்ரியாட்’ திரைப்படத்திலிருந்து நயன்தாராவின் கேரக்டர் லுக் வெளியானது!

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ‘பேட்ரியாட்’ திரைப்படத்தில் முன்னணி நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் இந்த மிகப்பெரிய மல்டி ஸ்டார்ரர்  திரைப்படத்தின் முக்கிய பெண் கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் நேற்று காலை 10 மணி முதல் ஒவ்வொரு மணி நேர இடைவெளியிலும் வெளியிடப்பட்டன. இதில் முன்னணி நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்றுள்ளது.

இந்த படத்தில் நயன்தாரா முக்கியமான மற்றும் வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரேவதி, கிரேஸ் ஆண்டனி, கீதீ சங்கீதா, ஸ்ரீ பார்வதி, தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் செரின் ஷிஹாப் ஆகியோரும் நடித்துள்ளனர்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை கோலோச்சி வரும் நயன்தாராவின் கேரக்டர் போஸ்டர் மகளிர் தினத்தில் வெளியாகியிருப்பது அவரது ரசிகர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்