சத்தியத்தின் சக்தியை மையமாக வைத்து ‘ப்ராமிஸ்’ திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்து அருண்குமார் சேகரன் இயக்கியுள்ளார்.
நாயகியாக நதியா சோமு நடித்துள்ளார். மேலும் சுஜன், அம்ரிஷ், பிரதாப், கோகுல், சுந்தரவேல்,ராஜ்குமார்,கலைவாணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.என் .நாகராஜ் பெருமையுடன் வழங்க சங்கமித்ரன் ப்ரொடக்ஷன்,அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.
ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் சத்தியத்தின் சோதனையை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்கொண்டிருப்பார்கள். அப்படிப் படத்தில் கதாநாயகன் எதிர் கொள்ளும் தருணங்கள் படம் பார்ப்பவர்களை சுவாரஸ்ய ஆட்டத்திற்குள் இறங்கி ரசிக்க வைக்கும். 

படத்தின் பர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் பார்வையை இயக்குநர் சேரனும் ஒளிப்பதிவாளர் நடிகர் நட்டியும் வெளியிட்டு பரவலாகப் பேசப்பட்டது. படத்தின் டிரைலர் ஏபி இன்டர்நேஷனல் தளத்தில் வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுப் படத்திற்குப் பரவலான அறிமுகமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலூர் ,ஓசூர் ,கிருஷ்ணகிரி போன்ற வடதமிழ்நாட்டுப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது.
படத்திற்கு வாய்ஸ் ஓவர் எனப்படும் பின்னணிக் குரல் கொடுக்க வந்த தேசிய விருது பெற்ற நடிகர் எம். எஸ். பாஸ்கர் படத்தின் காட்சிகளைப் பார்த்து நெகிழ்ந்து கண்ணீர் விட்டுப் பாராட்டி இருக்கிறார்.அவரது பாராட்டால் உற்சாகமடைந்திருக்கிறது படக்குழு. குடும்பத்தினருடன் திரையரங்குகளில் வந்து பார்க்கும் படியாக நெகிழ வைக்கும் காட்சிகளோடு உருவாகி இருக்கிற இந்த ‘ப்ராமிஸ்’ ,ஆக்சன் ரியாக்சன் ஜெனிஷ் வெளியீடாக ஜூன் 26 ஆம் தேதி வெளியாகிறது.


