Home பொது நல்ல படங்களைக் கொண்டாடும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த படமும் கொண்டாடும் வகையில் இருக்கும்! -சென்னையில்...

நல்ல படங்களைக் கொண்டாடும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த படமும் கொண்டாடும் வகையில் இருக்கும்! -சென்னையில் நடந்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் பஹத் பாசில் நம்பிக்கை

பாவனா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கிரீஷ் ஏ. டி. இயக்கத்தில் நிவின்பாலி- மமீதா பைஜூ நடிப்பில் ப்ரீமார்க் புரொடக்ஷன் மற்றும் பியூச்சர் ரன்னர் அப் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி முதல் மலையாள மொழியில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தை  ப்ரீமார்க் புரொடக்ஷன் மற்றும் பியூச்சர் ரன்னர் அப் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தின் தமிழ் பதிப்பை செப்டம்பர் நான்காம் தேதி முதல் தமிழக முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுகின்றன..
‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தினை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் படக்குழுவினர் கலந்து கொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில்  தயாரிப்பாளர்கள் பஹத் பாஸில்- உன்னி மாயா பிரசாத்- இயக்குநர் கிரீஷ் ஏ டி- ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் பஹத் பாசில் பேசுகையில்,

”படத்தின் நாயகனான நிவின்பாலி மற்றும் மமீதா பைஜூ ஆகிய இருவரும் தவிர்க்க முடியாத காரணத்தினால் இங்கு வர இயலவில்லை.
‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம்- எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. நான்- தினேஷ்- ஷியாம் -ஆகிய மூவரும் இணைந்து தயாரித்திருக்கிறோம். எங்களுடைய நட்பு 2018 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி அற்புதமாக தொடர்கிறது. எங்கள் இதயத்திற்கு நெருக்கமான கதைகளை தேர்வு செய்து நாங்கள் தொடர்ந்து திரைப்படங்களை தயாரிக்க உள்ளோம். இந்த அழகான திரைப்படத்தை வழங்கியதற்காக இயக்குநர் கிரிஷ் ஏடி உள்ளிட்டஇந்த படக் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் நல்ல படங்களை வரவேற்று கொண்டாடுவார்கள். அவர்களுக்கு இந்த திரைப்படமும் கொண்டாடும் வகையில் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இந்த திரைப்படத்தை வெற்றி பெறச் செய்த மலையாள ரசிகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இயக்குநர் கிரீஷ் ஏ டி- இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தில் நிவின் பாலி,  மமீதா பைஜூ, சங்கீத் பிரதாப்,  ரோஷன் ஷா நவாஸ் ,ஷியாம் மோகன், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அஜ்மல் ஷபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் காமெடி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பாவனா ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் பகத் பாசில் & பிரண்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கின்றன. இந்த திரைப்படத்தை தமிழில் ப்ரீமார்க் புரொடக்ஷன் மற்றும் பியூச்சர் ரன்னர் அப் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகிகின்றன.
படத்தின் தயாரிப்பாளரான உன்னி மாயா பிரசாத் பேசுகையில்,
 ” இந்த திரைப்படத்தை அனைவரும் திரையரங்குகளில் பாருங்கள். மலையாள ரசிகர்களை போல் உங்களுக்கும் இந்த திரைப்படம் பிடிக்கும் என்று நம்புகிறேன். ஆதரவு தாருங்கள்” என்றார்.
இயக்குநர் கிரீஷ் ஏ டி- பேசுகையில், ”எனக்கு கூட்டத்தின் முன்பு எப்படி பேச வேண்டும் என்பது தெரியாது. செப்டம்பர் நான்காம் தேதி வெளியாகும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தை திரையரங்குகளுக்கு சென்று குடும்பத்தினருடன் பாருங்கள். உங்கள் அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ என்றால்.., கேரளாவில் தேவாலயங்களில் அருகே உள்ளவர்களை இப்படி வகைப்படுத்தி இருப்பார்கள்.
இப்படத்தில் இடம் பிடித்திருக்கும் சில கதாபாத்திரங்கள் நிஜ வாழ்க்கையில் இருந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் கதையின் நாயகனான ஜஸ்டின் கதாபாத்திரம் எனக்கு நன்கு அறிமுகமான ஒருவரின் வாழ்வியல் இருந்து உருவான கேரக்டர்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்