Home பொது அனைத்து தரப்பினரையும் கவரும் குடும்பப்பாங்கான ஹாரர் படம் ‘பேய் பிடிச்சிருக்கு’ ரிலீஸுக்கு தயாராகிறது.

அனைத்து தரப்பினரையும் கவரும் குடும்பப்பாங்கான ஹாரர் படம் ‘பேய் பிடிச்சிருக்கு’ ரிலீஸுக்கு தயாராகிறது.

பொதுவாக பேய் படங்களுக்கு கதை முக்கியமில்லை. ஆனால், விரைவில் ரிலீஸாகவுள்ள பேய் பிடிச்சிருக்கு’ என்ற படம் சிறப்பான, குடும்பப்பாங்கான கதையம்சத்தில் உருவாகியுள்ளது.

அண்ணாதுரை கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். காமெடி நடிகர் விஜய் கணேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமூகத்திற்கு நாசம் விளைவிக்கும் கயவர்களை அழிக்கும் பேயாக, செல்வி முத்ரா நடிக்கிறார்.

சாரபாம்பு சுப்புராஜ், வெங்கடேஷ், துருவன் நரேஷ், மாஸ்டர் சரண்வாஷ், நடிகைகள் செல்வி முத்ரா, ஜெயந்தி மாலா, ஹெலன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இளவரசன் இயக்கியுள்ளார். கதை, வசனம், பாடல்களை கலையமுதன் எழுதியுள்ளார். திரைப்பட கல்லூரி மாணவர்கள் நித்தின் அண்ணாதுரை குழுவினர் ஒளிப்பதிவை வித்தியாசமான கோணத்தில் கையாண்டு உள்ளனர். இசை பிரபாகரன், எடிட்டிங் பூபதி ரமேஷ், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். ரைட் பிங்கர்ஸ் மூவி கிரியேஷன் சார்பில், சி.அண்ணாதுரை மற்றும் ராமஜெயம் அண்ணாதுரை இருவரும் தயாரிக்கிறார்கள்.
சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடைப்பெற்றது. அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில், செண்டிமெண்டான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது.
ரசிகர்களை பிடிக்க, விரைவில் திரைக்கு வருகிறது ‘பேய் பிடிச்சிருக்கு.’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்