மைம்கோபி ஹீரோவாக நடிக்கும் முதல் படம் ‘பித்தன்.’
கதாநாயகி புதுமுகம் சினேகா. ஆடுகளம் முருகதாஸ், ஆர்யன், கூல் சுரேஷ், கல்கி உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள வினய் நாராயணனிடம் படம் பற்றி கேட்டபோது,
”கதையின் நாயகன் டூவீலர் மெக்கானிக். தன் குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறான். திடீரென புயல் போல் ஏற்பட்ட பிரச்சனையால் தன் சொந்த ஊரை விட்டு சென்னைக்கு குடி பெயர்ந்த நிலையில் போலீஸ் மற்றும் ரவுடிகள் நாயகனைத் தேட காரணம் என்ன என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் எல்லோரும் ரசிக்கும்படி உருவாக்கி வருகிறோம். படப்பிடிப்பு செங்கல்பட்டு, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. Gringe Fire Production வி பிரியா தயாரிக்கும் இந்த படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு படக்குழுவினர் பரபரப்பாக இயங்கி வருகின்றனர்.


