‘பேட்டைக்காளி’ படமல்ல; தமிழர்களின் வாழ்வியல்! -‘நாம் தமிழர் கட்சி’யின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டு

ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகி, பெரியளவில் வரவேற்பு பெற்றிருக்கிறது ‘பேட்டைக்காளி’ வலைத்தொடர். இந்த தொடரை சிறப்புத் திரையிடலில் பார்த்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், ”இதை ஒரு படமாக கருத முடியாது. பேட்டைக்காளி ஒரு வாழ்வியல். பல்லாயிரம் ஆண்டுகளாக ஏறுதழுவுவது தமிழரின் மரபு. பிற்காலத்தில் விஜயநகரப் பேரரசர்களின் ஆட்சிக் காலத்தின் போது மாட்டுக்கொம்பில் சல்லியைக் கட்டும் வழக்கம் இருந்ததால், ஜல்லிக்கட்டு என்று பேர் வந்தது. பேட்டைக்காளி மிகவும் சிறப்பாக பிரமாண்டமாக எல்லாரும் பார்த்து பாராட்டும் வகையில் உருவாகியிருக்கிறது. இயக்குநர் ல.ராஜ்குமார் மிகவும் சிரமப்பட்டு கடும் உழைப்போடு ஜல்லிக்கட்டு மாடுகளையும் வீரர்களையும் ஒருங்கிணைத்து பேட்டைக்காளியை உருவாக்கியிருக்கிறார். திரையில் மாடுகள் குத்தி தூக்கி வீசும் காட்சிகளை பார்க்கும் போது வியப்பாக பிரமிப்பாக இருக்கிறது. ஜல்லிக்கட்டை நேரில் பார்த்திருப்போம். ஆனால், திரையில் பார்க்கும் போது இன்னும் சிறப்பாக இருக்கிறது. ஒளிப்பதிவு, பின்னணி இசை மிகவும் பொருந்தி இருக்கிறது. கிஷோர், வேலராமூர்த்தி, கலையரசன், பாலஹாசன் நடிப்பு ரசிக்கும் வகையில் உள்ளது.

படத்தில் கிஷோர் மேய்க்கும் நாட்டு மாடுகள் காட்சிகளை ஒருங்கிணைத்து எடுக்கும் கஷ்டம் எனக்கு நன்றாகவே தெரியும். எல்லாரும் வாழ்ந்து இருக்கிறார்கள். பேட்டைக்காளி மாடு வித்தியாசமாக இருக்கிறது; நன்றாக நடித்தும் இருக்கிறது. இயக்குநருடைய உழைப்பு திரையில் நன்றாக தெரிகிறது. அதை யாராலும் பாராட்டாமல் இருக்க முடியாது. இயக்குனர் ல.ராஜ்குமாருக்கு பாராட்டுக்கள்! படத்தை தயாரித்த தம்பி வெற்றிமாறனுக்கும் பாராட்டுக்கள்!

எல்லா மக்களும் இந்த பேட்டைக்காளிக்கு கண்டிப்பாக ஆதரவும் பாராட்டும் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். வெற்றிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார்.

ஆஹா ஓடிடி தளம் பற்றி: வாரம் ஒரு புதிய திரைப்படம், ஒரு புது வெப் சீரிஸ் என பல அசத்தலான நிகழ்ச்சிகளை வெளியிட்டு தமிழ் மக்களை மகிழ்விக்கும் ஆஹா OTT தளத்தில், சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மக்களால் கொண்டாடப்பட்ட சர்தார், மிரள், ட்ரிகர் மற்றும் டைரி ஆகிய திரைப்படங்கள் வெளியாகி வெற்றிநடை போடுகின்றன. சமீபத்தில் வெளியான ஆஹா ஒரிஜினல் படைப்பான பேட்டைக்காளி மற்றும் ரத்தசாட்சி பார்வையாளர்களிடையே பேராதரவை பெற்று வருவதை ஒட்டி ஆஹாவின் மற்றொரு ஒரிஜினல் திரைப்படமான உடன்பால் ஆஹா OTT தளத்தில் விரைவில் வெளியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here