வளர்ந்து வரும் ஒப்பனை கலைஞர்கள் தொழில் முனைவோராக உருவாக ஊக்கவிக்கும் வகையில் புதுயுகம் தொலைக்காட்சியில் FLBA india Freelancer Beauty Association நிறுவனத்தின் பிரமாண்ட ஏற்பாட்டில் உருவாகியுள்ள நிகழ்ச்சி Celebrity Makeup Artist.
இந்நிகழ்ச்சியில் ஒப்பனை கலைஞர்கள் உருவாக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஒப்பனை கலைஞர்கள் ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களுடைய திறமையை வெளிக்கொண்டு வரும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியானது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒப்பனை மற்றும் அலங்காரம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த கலைஞர்கள் பங்கு பெற்று தங்களுடைய திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சியில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு கலாச்சார ரீதியான ஒப்பனை மற்றும் அலங்காரங்களை பல்வேறு கலைஞர்கள் செய்து காட்டியுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கு பெறும் ஒப்பனை கலைஞர்கள் சினிமா மற்றும் ஊடக சார்ந்த வாய்ப்புகளை இந்நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் செய்த தருகின்றனர் . FLBA india அமைப்பானது அழகு கலை துறை சார்ந்த அனைத்து கலைஞர்களுக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளும் பல்வேறு விதமான தொழில் வளர்ச்சி சார்ந்த உதவிகளையும் செய்து வருகின்றனர். இந்நிகழ்ச்சிஞாயிறு தோறும் காலை 10.30 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.