உள்ளூர் மொழியில் வெளியாகும் படங்கள் குழந்தைகளை கூட்டிப்போய் பார்த்து ரசிக்க முடியாத அளவிற்கு மாறிவிட்ட சூழ்நிலையில் உலக மொழிப் படங்கள் அவ்வப்போது கை கொடுக்கின்றன. குழந்தைகளுக்கான படங்கள், குழந்தைகள் ரசிக்கக்கூடிய படங்கள் என வெரைட்டி காட்டுகிற படங்களின் வரிசையில் இரண்டாவது வகை படமாக விரிகிறது கரடியை கதாநாயகனாக்கியிருக்கிற ‘பேடிங்டன் இன் பெரு,’
2014-ல் வெளியான பேடிங்டன், 2017-ல் வெளியான பேடிங்டன் படங்களைத் தொடர்ந்து வெளியாகும் மூன்றாவது பாகம் இது.
பேடிங்டன் கரடிக்கு தன் அத்தை லூசி கரடியை பார்க்க வேண்டும்; அதற்கு துணையாக ப்ரெளன் குடும்பத்தினர் இணைகிறார்கள். எல்லோருமாக சேர்ந்து லூசியின் வசிப்பிடத்தை சென்றடைகிறார்கள். லூசியை அங்கு காணவில்லை; அவர் அங்கிருந்து வெளியேறியிருப்பது தெரிகிறது. அவர் எங்கே போனார் என்பதை கண்டுபிடிக்க பேடிங்டனும், ப்ரெளன் குடும்பத்தினரும் எல் டொராடோவுக்கு புறப்படுகிறார்கள். அந்த பயணம் முழுவதும் சுவாரஸ்யமான சம்பவங்களோடு கடந்துபோக,
காடுகள், மலைகள், அமேசான் நதி என திரும்பிய பக்கமெல்லாம் பசுமையும் பிரமாண்டமும் எரிக் வில்ஸனின் ஒளிப்பதிவில் அசத்தலான விஷுவல் டிரீட்டாகியிருக்கிறது. பெரு நாட்டிற்கு சம்மர் டிரிப் அடித்தது போன்ற திருப்தி தருகிறது.
பயணத்தின் முடிவு மகிழ்ச்சி & நெகிழ்ச்சி.
ஹன்டர் கபோட் என்ற பாத்திரத்தில் பேராசைக்காரராக வருபவர் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெக்ஸிகோ’ படத்தின் ஹீரோ அன்டோனியோ பண்டேராஸ். அவர் பேடிங்டன் அமேசான் நதியைக் கடக்க உதவுவது ரசிக்க வைக்க, எல்டோரா புராதனத் தங்க நகரத்தின் பின்னணியும் அது சார்ந்த காட்சிகளும் சிலிர்ப்பூட்டுகின்றன.
முதல் பாகத்தில் கரடி, ப்ரெளன் குடும்பத்தினரை லண்டன் பேடிங்டன் இரயில்வே நிலையத்தில் சந்திப்பதும், ரயில்வே ஸ்டேசனின் பெயரை கரடிக்கு வைத்து தங்களுடன் அழைத்துப் போவார்கள்.
இரண்டாம் பாகத்தில், திருட்டுப் பழிக்கு ஆளான பேடிங்டனை ப்ரெளன் குடும்பத்தினர் மீட்டெடுப்பார்கள். இந்த மூன்றாம் பாகத்தில், அறிமுக இயக்குநர் டூகுல் வில்சன் பெரு நாட்டுக்கு பேடிங்டனையும் கூடவே நம்மையும் கைப்பிடித்து அழைத்துப் போகிறார்; உற்சாக அனுபவம் தருகிறார்.