சென்னை அடையாறு பாட்ரிஷியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் ‘எவலுசியான் 2022’ கலை விழா நடைபெற்றது.
மாணவர்களிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன அக்டோபர் 20, 21 தேதிகளில் அரங்கப் போட்டிகள் நடைபெற்றன 27, 28-ம் தேதிகளில் மேடைகளில் நடைபெறுகின்ற போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டியின் நிறைவு விழா 28 அக்டோபர் நடைபெற்றது.
இந்த ஆண்டு கலை விழாவிற்கான கருப்பொருளாக ராஜ வம்சம் என்னும் தலைப்பு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்தியாவின் பண்டைய அரசாட்சி முறையை அரசர்களை அரசிகளை ஆட்சி முறையை பற்றி விளக்குவதாக மாணவர்கள் பல்வேறு தலைப்புகளில் தங்களின் தனித்திறனை வெளிப்படுத்தினார்கள்!
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எழுத்தாளரும் நடிகருமான ஷாஜி சென் கலந்து கொண்டார்.
நிகழ்வில் அவர் பேசும்போது, ‘மாணவர்கள் கூட்டத்தோடு கூட்டமாக இல்லாமல் கூட்டத்திலிருந்து திரும்பிப் பார்ப்பவராக, மற்றவர்கள் தங்களை திரும்பிப் பார்க்கச் செய்பவராக இருக்க வேண்டும். மொபைல் போன்களை ஒட்டுமொத்தமாக தவிர்க்க இயலாதுதான் என்றாலும் அவ்வப்போது அதை கொஞ்சம் தள்ளி வைத்து தங்கள் தனித்திறனை நிரூபிக்க முயற்சித்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்” என்றவர் புத்தகம் வாசிப்பதன் அவசியத்தையும் எடுத்துச் சொன்னார்.
நிகழ்வில் திரைப்பட இணை இயக்குநர் ஸ்ரீ கௌதம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்த எவலுசியான் விழாவின் ஒட்டுமொத்த சாம்பியனாக மேலாண்மைத் துறை வாகை சூடியது.
இரண்டாவது பரிசினை வணிக நிறுவனச் செயலாண்மைத் துறை பெற்றது. மூன்றாவது பரிசை உளவியல் துறை பெற்றது.
இந்த போட்டிகளில் மிஸ்டர் எவலுசியானாக உளவியல் துறையை சேர்ந்த நிதிஷ் என்பவரும் மேலாண்மை துறையைச் சார்ந்த யஷ் என்பவரும் வெற்றிக் கோப்பைக்கு சொந்தக்காரரானார்கள்.
மேலாண்மை துறையை சார்ந்த செல்வி ரோஷினி மிஸ் எவல்யூசியான் பட்டத்தைப் பெற்றார். கருத்து நடை பழகும் போட்டியில் மிஸ்டர் பாட்ரிஷியனாக உளவியல் துறையைச் சார்ந்த ஹேமவேஸ்வரன், உளவியல் துறையைச் சார்ந்த செல்வி பேர்ல் ஜூடித் ராஜு மணிமகுடம் சூடினார்கள்.
விழாவில் கல்லூரியின் இயக்குனர் மற்றும் செயலாளர் அருட் சகோதரர் டாக்டர் ஸ்டெனிஸ்லாஸ் அவர்களும் கல்லூரி கல்வி இயக்குனர் டாக்டர் பாத்திமா வசந்த், கல்லூரியின் முதல்வர் டாக்டர் உஷா ஜார்ஜ் கல்லூரியின் துணை முதல்வர் பிரிவு 2 டாக்டர் கீதா ரூபஸ் மற்றும் துணை முதல்வர் பிரிவு 1 ஒன்று டாக்டர் பி மீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இன்று நடைபெற்ற எவலுசியான் நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு உற்சாகத்துடன் நிகழ்ச்சியை ரசித்தனர்.